(Source: ECI/ABP News/ABP Majha)
டிடிவி தினகரனை வரவேற்க வாழை மரம் கட்டிய வாலிபர் மீது வேன் மோதி பலி
விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அருகே டிடிவி தினகரனை வரவேற்க வாழை மரம் கட்டிய வாலிபர் மீது வேன் மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் ,வானூர் வட்டம், வானூர் அருகே உள்ள ஒட்டை கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் வயது 50. இவருக்கு மூன்று மகன்கள் இதில் இரட்டையர்களில் ஒருவரான மூத்த மகன் சரண் வயது 18, இவர் சேதராபட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு கோட்டக்குப்பத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக இன்று சென்னையில் இருந்து டிடிவி தினகரன் வரவுள்ளதையோட்டி அவரின் வரவேற்புக்காக புதுச்சேரி - சென்னை கிழக்கு கடற்கரை சாலை புதுச்சேரி அடுத்த தமிழக எல்லையான பிள்ளைச்சாவடியில் இருந்து கோட்டக்குப்பம் வரையில் வாழைமரம் கட்டும் பகுதி நேர கூலி வேலையில் சரண் ஈடுபட்டு இருந்துள்ளார்.
பிள்ளைசாவடியில் கோயில் குளக்கரை அருகே வாழைமரம் கட்டி விட்டு மறுபுறம் கட்டுவதற்காக நேற்று இரவு சுமார் 10:30 மணி அளவில் சாலையை சரண் கடந்து இருக்கிறார். அப்போது சென்னையில் இருந்து புதுச்சேரியை நோக்கி வந்து கொண்டிருந்த மஞ்சு குப்பம் அருகே மாருதி சுசுகி ஆம்னி வேன் மோதியதில் சரண் 50 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார். இது சம்பந்தமாக கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் சரணின் தந்தை புகார் அளிக்க சென்று இருந்தார். அப்போது அவர் மகனை இழந்து காவல் நிலைய வாசலில் அவர் கதறி அழுதது காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தவர்கள் மற்றும் பொதுமக்களை பரிதவிக்க செய்தது.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்