Villupuram: 100 நாள் வேலை செய்பவர்களுக்கு கிடா வெட்டி பிரியாணி - ஊராட்சி மன்ற தலைவரின் நெகிழ்ச்சி சம்பவம்
நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு கிடா வெட்டி பிரியாணி போட்ட ஊராட்சி மன்ற தலைவரின் நெகிழ்ச்சி சம்பவம்
விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகேயுள்ள ஆசூர் ஊராட்சி மன்ற தலைவர் தனது கிராமத்தில் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு கிடா வெட்டி பிரியாணி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள ஆசூர் கிராமத்தில் தேமுதிகவை சார்ந்த ஞானசேகரன் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணி செய்து வருகிறார். இந்த கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் குளம், வாய்க்கால், ஏரி போன்றவைகள் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தில் பணிபுரிபவர்கள் சிறப்பாக பணி புரியவேண்டும் என பணியின் போது அவர்களுக்கு எந்த அசம்பாவிதங்களும் ஏற்பட கூடாதென்று அப்பகுதியின் ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகரன் நேற்று அப்பகுதியில் உள்ள அய்யனாரப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து 8 கிடா வெட்டி மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு தலைவாழை இலை போட்டு பிரியானி விருந்து வைத்துள்ளார். ஊராட்சி மன்ற தலைவராக இருப்பதால் தன் கிராம மக்களுக்கு நூறு நாள் வேலை திட்டத்தில் கிடா வெட்டி பிரியாணி விருந்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்