விழுப்புரம்: மீன்பிடி துறைமுகம் பணியை செயல்படுத்தக் கோரி ஈசிஆரில் மீனவர்கள் போராட்டம்
விழுப்புரம்: மீன்பிடி துறைமுக பணியை உடனடியாக செயல்படுத்தக் கோரி மீனவர்கள் ஈசிஆர் சாலை ஓரம் உண்ணாவிரதப் போராட்டம்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் ஆலம்பரா ஆகிய பகுதிகளில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள மீன்பிடி துறைமுக பணியை உடனடியாக செயல்படுத்தக் கோரி இரண்டு மாவட்ட மீனவர்கள் மரக்காணம் அருகே அனுமந்தை ஈசிஆர் சாலை ஓரம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் 19 மீனவர் கிராமங்கள் உள்ளது. இதுபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 44 மீனவர் கிராமங்கள் இருக்கின்றது. இந்த மீனவர் கிராமங்களில் ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் உள்ளது. இந்த மீன்பிடி விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்த இரண்டு மாவட்டங்களிலும் இதுவரையில் மீன்பிடி துறைமுகங்கள் இல்லை. இதனால் இப்பகுதியில் உள்ள மீனவர்கள் தங்களது மீன்பிடி படகுகளை புயல் அதிகப்படியான கனமழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களின் போது பாதுகாப்பாக நிறுத்த வேண்டும் என்றால் விழுப்புரம் பகுதியில் உள்ள மீனவர்கள் புதுவை கடலூர் ஆகிய பகுதியில் உள்ள துறைமுகங்களுக்கு செல்ல வேண்டும். இதுபோல் செங்கல்பட்டு பகுதியில் உள்ள மீனவர்கள் சென்னை பகுதியில் உள்ள துறைமுகங்களுக்குத்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு இந்த இரண்டு மாவட்ட மீனவர்களும் தங்களது மீன்பிடி உபகரணங்களை பாதுகாக்க எடுத்துச் செல்லும் பொழுது பல்வேறு பிரச்சனைகளும் சட்ட சிக்கல்களும் உண்டாகிறது.
இதன் காரணமாக இந்த மீனவர்கள் பல நேரங்களில் அவர்களது மீன்பிடி விசைப்படகுகளை கடலிலேயே நிறுத்தி விடுவது வழக்கம். இவ்வாறு கடலில் விசைப்படகுகளை நிறுத்தும் பொழுது சூறாவளி காற்று கடலில் ஏற்படும் சுழற்சி போன்ற திட்டத்தின் பொழுது எதிர்பாராத விதமாக கடலில் முழுகி விடும் அவல நிலை உள்ளது. இதுபோல் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் மதிப்புள்ள விசைப்படகுகள் மீன்பிடி சாதனங்கள் கடலிலேயே மூழ்கி அழியும் நிலை தொடர்கிறது. இது போன்ற காரணங்களால் மீனவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இந்த இரண்டு மாவட்ட மீனவர்களின் நலன் கருதி மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர். இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் அழகன் குப்பம் பக்கிங்காம் கால்வாயிலும் செங்கல்பட்டு மாவட்ட மீனவர்களுக்கு ஆ ஆலம்ப ரா எந்த இடத்திலும் இரண்டு பீப்பிள் துறைமுகங்கள் அமைக்க கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் அரசு சார்பில் ரூபாய் 236 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு துறைமுகங்கள் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மேற்கொண்டனர். இதனைப் பார்த்த ஒரு சில தொண்டு நிறுவனத்தினர் தற்பொழுது மீன்பிடி துறைமுகம் அமைய உள்ள பகுதியில் கடல் ஆமைகள் ஆண்டுதோறும் முட்டை இடுவது வழக்கம் இங்கு துறைமுகம் அமைந்தால் கடல் ஆமைகள் இப்பகுதியில் முட்டையிட முடியாது. இதனால் கடல் ஆமைகளின் இனப்பெருக்கம் குறையும் மேலும் இந்த மீன் பிடி துறைமுகங்களால் சுற்று சூழலுக்கும் பாதிப்பு உண்டாகும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் துறைமுகங்கள் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளும் நிறுத்தப்பட்டு விட்டது. இதன் காரணமாக இந்த இரண்டு மாவட்டங்களிலும் துறைமுகங்கள் அமைந்தால் மீனவர்கள் மட்டுமல்லாமல் மற்ற பொது மக்களும் ஆயிரக்கணக்கானோர் பயனடைவார்கள்.
இந்த துறைமுகம் அமைக்கப்படுவதை விரும்பாத ஒரு சில தொண்டு நிறுவனத்தில் தான் அரசுக்கு எதிராகவும் மீனவர்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்றனர். இதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது. மேலும் துறைமுகங்கள் அமைய உள்ள இடத்தின் அருகில் ஒரு சிலர் சொகுசு விடுதிகளையும் கட்டி உள்ளனர். இந்த சொகுசு விடுதிகளுக்கு தங்க வருபவர்களை அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக பக்கிங்கம் கால்வாய்க்கு படகு சவாரியும் இட்டு செல்கின்றனர். எனவே இந்த இரண்டு மாவட்டங்களிலும் தடைசெய்யப்பட்டுள்ள துறைமுகப் பணிகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி விழுப்புரம் செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈசிஆர் சாலையில் அனுமந்தை எந்த இடத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.