Schools Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் விடுமுறை: தொடரும் கனமழை பாதிப்பின் தாக்கம்.!
Schools Colleges Leave December 06: மழை பாதிப்பு காரணமாக , நாளை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் தாக்கத்தால் கடுமையான மழைப்பொழிவானது தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் கொட்டித் தீர்த்தது. குறிப்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழையின் அளவு வழக்கத்தைவிட மிக அதிகமாக பொழிந்து சேதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மழையின் தாக்கம் காரணமாக நாளையும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Also Read: PSLV-C59 Rocket: நேற்று கோளாறு: இன்று சீறிப் பாய்ந்த இஸ்ரோவின் PSLV-C59 ராக்கெட்.! இது எதற்காக?
தமிழ்நாட்டில் வானிலை நிலவரம்:
05-12-2024 மற்றும் 06-12-2024:
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
07-12-2024 முதல் 10-12-2024 வரை:
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
11-12-2024:
கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை' பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கனமழையின் காரணமாக கடுமையான மழைப்பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கிடவும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சான்றிதழ்கள், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்தி புதிய சான்றிதழ்கள் வழங்கிடவும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதிப்புக்குள்ளான குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கிடவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.