மேலும் அறிய
Advertisement
வடலூரில் 151ஆவது தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - இணையதளம் வாயிலாக நிகழ்ச்சியை காண ஏற்பாடு
இணையதளம், தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்படுவதால் பக்கதர்கள் ஜோதி தரிசன நிகழ்ச்சியை வீட்டில் இருந்தே காணுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வேண்டுகோள்
கொடியேற்றத்துடன் தொடங்கிய வள்ளலார் 151 வது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா, விழாவின் போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை -கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம் அறிவிப்பு. தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது ஆகையால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடைமுறையில் இருந்து வரும் ஊரடங்கை கூடுதல் கட்டுப்பாடுகளுடன் 31.01.2022 வரை நீட்டித்து தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த 06.01.2022ஆம் தேதியில் இருந்து இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரையிலும் , ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் பின்பற்ற உத்தரவிடப்பட்டது .
கடலூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது இந்த மாதத்தின் ஆரம்பத்தில் ஒற்றை இல்லக்கில் இருந்த கொரோனா தொற்று தற்பொழுது 300 ஐ கடந்து பதிவாகி வருகிறது, ஆகையால் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு வடலூர் சத்தியஞானசபை அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா எப்பொழுதும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் 151 வது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வடலூரில் உள்ள சத்தியஞானசபை அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவித்து இருந்த நிலையில் கொடியேற்றத்தின் பொழுது பக்தர்கள் குறைந்த அளவில் கலந்த கொண்டனர், மேலும் நாளை நடைபெற உள்ள தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவின் போது கொரோனா பரவலின் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும், தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்படுவதால் பக்கதர்கள் ஜோதி தரிசன நிகழ்ச்சியை வீட்டில் இருந்தே காணுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.
மேலும் இனைதள பக்கத்தின் மூலம் நேரடி ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது ஆகையால் மக்கள், https://www.youtube.com/ channel/ UCEiJozGGHgOZFISkQAOB93A என்ற இணையதள பக்கம் மூலம் தங்கள் வீட்டில் இருந்தே பக்தர்கள் தைப்பூச விழாவினை காண ஏற்பாடு செய்யபட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் அதிக கூட்டம் சேருமிடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும் ,வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது கட்டாயம் முக கவசம் அணிந்து செல்லவும் நோய் அறிகுறி இருப்பின் உடன் மருத்துவ ஆலோசனை பெறவும் ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion