TN Local Body Election 2022 | பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட திண்டிவனம் நகராட்சியின் கள நிலவரம்
’’திண்டிவனம் நகராட்சி தலைவர் பதவி முதன் முறையாக பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தமுள்ள 33 வார்டுகளில் 15 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’’
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி தலைவர் பதவி இதுவரை ஆண்கள் வசம் இருந்து வந்த நிலையில், முதன் முறையாக பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திண்டிவனம் நகராட்சி கடந்த 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி மூன்றாம் நிலை நகராட்சியாக உருவானது. அதன் பிறகு 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1998 ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி முதல் நிலை நகராட்சியாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2008ஆம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி தேர்வு நிலை நகராட்சியாக அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
MP Navaneethakrishnan: பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட நவநீதகிருஷ்ணன்.. பின்னணி இதுதான்
திண்டிவனம் நகராட்சியின் எல்லையாக தெற்கில் ஜக்காம் பேட்டையும், வடக்கில் சலவாதியும், கிழக்கில் வட ஆலப்பாக்கம் ஊராட்சியும், மேற்கில் பெலாக்குப்பம் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதியாக உள்ளது. நகரத்தில் மொத்த பரப்பளவு 22.33 சதுர கிலோ மீட்டர் கொண்டுள்ளது. திண்டிவனம் நகராட்சியில் மக்கள் தொகை 2011 ஆம் ஆண்டின் கணக்குப்படி 72,796 ஆகும். இதில் 36,338 ஆண்களும், 36,458 பெண்களும் உள்ளனர்.மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 58,433 ஆகும்.
இதில் ஆண் வாக்காளர்கள் 27,990, பெண் வாக்காளர்கள் 30,491, இதர வாக்காளர் 2 என மொத்தம் 58,433 பேர் உள்ளனர். திண்டிவனம் நகராட்சி தலைவர் பதவி இதுவரை, ஆண்களுக்கு ஒதுக்கப்பட்டு வந்தது. தற்போது முதன் முறையாக சேர்மன் பதவி பெண்களுக்காக (பொது) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மொத்தமுள்ள 33 வார்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெறும் கவுன்சிலர்களில், சேர்மன் பதவிக்கு அதிக ஓட்டு பெற்று வெற்றி பெறும் பெண் ஒருவரே தலைவர் பதவியை கைப்பற்ற உள்ளார். நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது.
இதில் 15 வார்டுகள் பெண்கள் மட்டுமே போட்டியிடுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 11 வார்டுகள் பொது என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், இந்த வார்டுகளிலும் பெண்களும் போட்டியிட வாய்ப்பு உள்ளது. திண்டிவனம் நகராட்சியில் மொத்தம் 66 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்களுக்காக 29, பெண்களுக்காக 29 வாக்குச்சாவடிகளும், பொது (ஆண், பெண்) வாக்குச்சாவடியாக 8 அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tiruvottiyur MLA Shankar: பொறியாளரை தாக்கியதாக புகார்!பொறுப்பிலிருந்து எம்எல்ஏவை நீக்கிய திமுக
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்