தென் மாவட்ட மக்களுக்கு குட் நியூஸ்; வருகிறது புதிய பேருந்து நிலையம் - எங்கு தெரியுமா ?
Ulundurpet New Bus Stand: உளுந்தூர்பேட்டையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடத்தை உடனடியாக தேர்வு செய்ய வேண்டும் என அமைச்சர் நேரு உத்தரவு.

சென்னை: உளுந்தூர்பேட்டையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடத்தை உடனடியாக தேர்வு செய்ய வேண்டும் என அமைச்சர் கேஎன் நேரு உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி - விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது உளுந்துார்பேட்டை பகுதி சென்னை, திருச்சி, சேலம், மதுரை, வேலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் மையப் பகுதியாக இருப்பதால் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் இவ்வழியாக வந்து செல்கின்றன.
இத்தகையை முக்கியவந்துவம் வாய்ந்த உளுந்துார்பேட்டையில் பேருந்து நிலையம் இல்லாமல் சாலையில் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை இறக்கி ஏற்றிச்சென்றனர். இதற்கு பின்னர் சிறிய அளவில் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இதிலும் ஒரு சில தனியார் பேருந்துகள் மட்டுமே உள்ளே சென்று வந்தன.
பின்னர் இந்த பேருந்து நிலையத்தில் புதிதாக கடைகள் மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, பேருந்து நிலையத்தில் பேருந்துகளை நிறுத்த தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டதால் பேருந்துகள் உள்ளே சென்று வந்தன. காலப்போக்கில் பேருந்து போக்குவரத்து வாகன மிகுதியானதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுவது வாடிக்கையானது.
மேலும் உளுந்துார்பேட்டை பேருந்து நிலையப் பகுதியில் சாலை விரிவாக்கம் இல்லாததால் சொகுசு பேருந்துகள், குளிர்சாதன பேருந்துகள் பெரும்பாலும் தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச் சாலையிலேயே சென்று விடுகின்றன.
வாகன போக்குவரத்து மிகுதியால் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலைய இடத்தை வேறு இடத்திற்கு மாற்றி புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில் 6 ஏக்கர் பரப்பளவில் பஸ் நிலையம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
இதற்காக உளுந்துார்பேட்டை பேருந்து நிலையம் அமைவதற்கான இடம் அஜீஸ் நகர் ரவுண்டானா அருகே அல்லது பு.மாம்பாக்கம் சாலை அருகே என இரு இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதற்கான இடங்களை கலெக்டர் மற்றும் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பார்வையிட்டனர். அனால் பொதுமக்கள் அந்த இடைத்தை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
உளுந்துார்பேட்டையில் பஸ் நிலையம் கட்ட ரூ. 22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி தற்போது வரை இடம் தேர்வு செய்யப்படாமல் குழப்பம் நீடித்து வருவதால் பணி கிடப்பில் போடப்பட்டது.
உளுந்தூர்பேட்டையில் புதிய பேருந்து நிலையம்
இந்த நிலையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கோட்டூர்புரம் நகராட்சி கட்டிடத்தை வேறு இடத்தில் மாற்ற வேண்டும் மற்றும் அனைத்து பேரூராட்சிகளிலும் நூலகத்துடன் கூடிய அறிவு சார் மையம் அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.
தொடர்ந்து, உளுந்தூர்பேட்டையில் நீண்ட நாட்களாக பேருந்து நிலையம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்த நிலையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு உடனடியாக உளுந்தூர்பேட்டையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உளுந்தூர்பேட்டையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதன் மூலம் சென்னை, திருச்சி, சேலம், மதுரை, வேலுார் போன்ற பகுதிகளுக்கு செல்ல ஏதுவாகவும், போக்குவரத்து நெரிசல்இன்றி செல்லலாம் என பொதுமக்கள் மற்றும் ஓட்டுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

