திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அதிரடி ஆய்வில் இறங்கிய ஆட்சியர் - என்ன நடந்தது?
திண்டிவனத்தில், ரூ.66.89 கோடி மதிப்பீட்டில், புதியதாக கட்டப்பட்டு வரும் அரசு தலைமை மருத்துவமனையில், மருத்துவமனை கட்டுமானப்பணிகளின் ஆய்வு

விழுப்புரம்: புதியதாக கட்டப்பட்டு வரும் திண்டிவனம் தலைமை அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திண்டிவனம் தலைமை அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், புதியதாக கட்டப்பட்டு வரும் திண்டிவனம் தலைமை அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்து, மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்,
திண்டிவனத்தில், ரூ.66.89 கோடி மதிப்பீட்டில், புதியதாக கட்டப்பட்டு வரும் அரசு தலைமை மருத்துவமனையில், மருத்துவமனை கட்டுமானப்பணிகளின் முன்னேற்றம் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது, தற்பொழுதுவரை நிறைவுபெற்றுள்ள பணிகள் குறித்தும், மருத்துவமனையில் அமையப்படவுள்ள உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.
கட்டுமானப்பணிகள் மற்றும் உட்கட்டமைப்பு பணிகளை விரைந்து முடித்திட உத்தரவு
அந்த வகையில், திண்டிவனம் அரசு தலைமை மருத்துவமனையில், தரைத்தளம் மற்றும் ஐந்து தளங்கள் கொண்ட சாய்தளபரப்பு, இணைப்புபகுதி கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், மகப்பேறு மருத்துவம், அறுவை சிகிச்சைப் பிரிவு, காத்திருப்பு பகுதி, மருந்தகம், X கதிர் மற்றும் MRI ஸ்கேன், கோப்புகள் அறை, புறநோயாளிகள் வார்டு, மீட்பு அறை, மருத்துவர் அறை, அவசரசிகிச்சைப் பிரிவு, விபத்துபிரிவு, காவலர் விசாரணைபிரிவு, பதிவறை, பணிநேர மருத்துவர் அறை, பணிநேர செவிலியர் அறை, கழிவறையும், தனிமைப்படுத்தப்பட்ட அறை, குழந்தைகள் தீவிர சிகிச்சைபிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, மருத்துவக் கருவிகள் அறை, உயர்சார்பு அலகு வார்டு போன்ற உட்கட்டமைப்பு வசதிகளுடன், மின்தூக்கி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் கட்டுமானப்பணிகள் மற்றும் உட்கட்டமைப்பு பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு
தொடர்ந்து, திண்டிவனத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், ரூ.20.00 கோடி மதிப்பீட்டில் 6 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப்பணி நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இப்புதிய பேருந்து நிலையத்தில், பேருந்து நிலைய வளாகத்தில், 50 பேருந்து நிறுத்தங்கள், 61 -கடைகள், 1 சைவ உணவகம், 1 - அசைவ உணவகம், 1பொருள்கள் வைப்பறை, 10 காத்திருப்பு கூடம், 6-நேரக்காப்பகம், 1 காவல்துறை கட்டுப்பாட்டு அறை, 1 நான் உங்களுக்கு உதவலாமா அறை, 1 பேருந்து முன்பதிவறை, 1 - இரயில் முன்பதிவறை, 1 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஓய்வறை, 2 தொகுதி மாற்றுத்திறனாளிகள் ஒய்வறை, 3 தொகுதி பெண்கள் மற்றும் ஆண்கள் கழிப்பறை, 1-சுகாதாரபிரிவு அலுவலகம், 2இலவச சிறுநீர் கழிப்பிடம், 1 நிர்வாக அறை, 1-பதிவறை போன்ற கட்டுமானப்பணிகள் அரசு வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி கட்டப்பட்டு வருவதை நேரில் ஆய்வு மேற்கொண்டதுடன், கட்டுமானப்பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட சலவாதி ரோட்டில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதனைதொடர்ந்து திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட 10-வது வார்டில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.39 இலட்சம் மதிப்பீட்டில் மல்லார்குட்டை குளத்தினை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் மல்லாண்குட்டை குளத்தின் கரைகளை பலப்படுத்தி நடைபாதை அமைத்து சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டு மின் விளக்குகள் அமைக்கப்படவுள்ளது. விரைவில் இப்பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து ஜக்காம்பேட்டை ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் ஏரிக்ரையை பலப்படுத்தி கலிங்கள் புனரமைத்து மதகு பராமரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம் ஆய்வு
தொடர்ந்து விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம் வி-சாலை ஊராட்சியில் முருகன் கோயில் பகுதியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.2.72 இலட்சம் மதிப்பீட்டில் குடியிருப்பு வீடு கட்டப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதே பகுதியில் உள்ள வி-சாலை ஊராட்சி கிராம நிர்வாக அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளிடம் தங்களுக்கு அடையாள எண் வழங்கப்பட்டதை குறித்து கேட்டறிந்தார். மேலும் ரூ.1.98 இலட்சம் இலக்கு நிர்ணயம் செய்து விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதை துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்து, இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.





















