மேலும் அறிய

திருப்பரங்குன்றம் விவகாரம்; ராமதாஸின் ரியாக்ஷன் என்ன?

திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு பலியிடும் விவகாரத்தில் இருதரப்பினருக்கு பாதகமில்லாத நடவடிக்கை எடுக்க வேண்டும் - மருத்துவர் ராமதாஸ்

விழுப்புரம்: திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு பலியிடும் விவகாரத்தில் இருதரப்பினருக்கு பாதகமில்லாத நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மாணவிக்கு ஆசிரியர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்தது ஏற்றுக்கொள்ளமுடியாது, கடுமையான தண்டனை அளிக்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்...

பாரதியார் பல்கலைககழகம், காமராசர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைகழகம் போன்றவைகளில் துணை வேந்தர் இல்லாமல் நிர்வாகம் முடங்கியுள்ளதாகவும், ஆளுநர் அரசுக்கு இடையிலான மோதலால் உயர்கல்வியை பாதிக்ககூடாது, துணை வேந்தர் இல்லாமல் பாதிப்பு ஏற்படுவதால் உச்சநீதிமன்றத்தில் எடுத்து கூறி துணை வேந்தரை நியமிக்க நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் கடந்த ஜூலை 18 ஆம் தேதி வெளியிடபட்டு ஆறு மாதங்களுக்கு மேலாகியும் பணி நியமன ஆணை வழங்கவில்லை என்றும் அரசு பள்ளிகளில் கல்வி தரம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது இதற்கு போதிய ஆசிரியர்கள் இல்லாதது தான் காரணம் என கூறினார்.

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க மாநில அரசுக்கு உள்ள அதிகாரம் குறித்து காங்கிரஸ் தலைமை அறிவிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் தேசிய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை என திமுக அரசு தெரிவித்து வரும் நிலையில் இதில் காங்கிரஸ் தலைமையின் நிலைப்பாடு குறித்து அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஆன்லைன் ரம்மிக்கு தமிழக அரசு தடை விதித்தது செல்லாதது என்று உயர்நீதிமன்ற அளித்த தீர்ப்பிற்கு பிறகு 19 பேர் உயிர் இழந்துள்ளனர். தாமதிக்காமல் ஆன்லைன் சூதாட்டிற்கு தடை விதிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்

தரமான நான்கு வழி சாலைகள் அமைக்கப்படுவதும் அதில் பயணிக்க சுங்ககட்டணம் வசூலிப்பது சரியானது ஆனால் முழு கட்டணம் வசூலித்த பிறகு சுங்கட்டண கொள்ளையில் ஈடுபட கூடாது திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது 48 சுங்கச்சாவடிகள் தமிழகத்தில் உள்ளதை குறைக்கபடும் என தமிழக அரசு சட்டப்பேரவையில் அறிவுத்திருந்தது. ஆனால் அதனை செய்யவில்லை கூடுதலாக சுங்கசாவடி வருவதால் எங்கையும் சுங்ககட்டணம் இல்லாமல் பயணிக்க முடியாத நிலை ஏற்படும் என்பதால் சுங்கசாவடிகளை குறைக்க வேண்டும் என கூறினார்.

போட்டி தேர்வுகள் மூலமாக சிறப்பு மருத்துவர்கள் நியமிக்காமல் நேர்கானல் மூலமாக தேர்வு செய்வதை ஏற்று கொள்ள முடியாது நேர்கானல் மூலம் மருத்துவர்கள் நியமிக்கபட்டால் அது முறைகேட்டிற்கு தான் வழி வகுக்கும் என்பதால் எதிர்ப்பு தெரிவித்தார். போச்சம்பள்ளியில் பள்ளி மாணவிக்கு ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும்

ஆசிரியர்களை கடவுளாக நினைத்து தான் பெற்றோர்கள் அனுப்பி வைக்கிறார்கள் ஆசிரியர்கள் செய்த தவறை மன்னிக்க முடியாது அவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் இதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் அரசு பள்ளி மாணவர்களின் பாதுகாப்பினை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள ஆடு பலியிட பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ் கடந்தாண்டு கடைப்பிடித்த நடவடிக்கையை கடைபிடிக்கலாம் என்றும் நீதிமன்ற மூலம் தீர்வு காணலாம் என அறிக்கப்பட்டுள்ளது. இருதரப்பிற்கும் பாதகமில்லாமல் இதற்கு தீர்வு காணவேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழக அரசுக்கு எந்த திட்டமும் ஒதுக்கவில்லை என்பது குறித்து தமிழக அரசு கண்டனத்தை தெரிவித்து மத்திய அமைச்சர்களை சந்திக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

Puducherry Power Cut: புதுச்சேரியில் நாளை (05-08-2026) மின்தடை அறிவிப்பு: எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும்?
Puducherry Power Cut: புதுச்சேரியில் நாளை (05-08-2026) மின்தடை அறிவிப்பு: எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும்?
1,200 வருஷத்து பழமை! திண்டிவனம் ஏரியில் கிடைத்த பல்லவர் காலத்து சிலை... ஆய்வில் வெளிவந்த ஆச்சரியத் தகவல்கள்!
1,200 வருஷத்து பழமை! திண்டிவனம் ஏரியில் கிடைத்த பல்லவர் காலத்து சிலை... ஆய்வில் வெளிவந்த ஆச்சரியத் தகவல்கள்!
பயிர் இழப்பைத் தடுக்க சூப்பர் வழிமுறைகள்! விழுப்புரத்தில் அட்மா திட்ட விவசாயிகள் - விஞ்ஞானிகள் சந்திப்பு!
பயிர் இழப்பைத் தடுக்க சூப்பர் வழிமுறைகள்! விழுப்புரத்தில் அட்மா திட்ட விவசாயிகள் - விஞ்ஞானிகள் சந்திப்பு!
போதையில் வீழ்வது தனிமனித இழப்பல்ல... தேசத்தின் வீழ்ச்சி! ஆரோவில்லில் ஒலித்த மோடியின் குரல்!
போதையில் வீழ்வது தனிமனித இழப்பல்ல... தேசத்தின் வீழ்ச்சி! ஆரோவில்லில் ஒலித்த மோடியின் குரல்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget