மேலும் அறிய

கேள்விக்குறியாகும் 2026 தேர்தல்; திருக்கோவிலுார் இணைப்பு தாமதம்... என்ன செய்யப்போகிறது அரசு?

விழுப்புரம் மாவட்டத்துடன் திருக்கோவிலூர் இணைப்பு குறித்து அறிவிப்பு வெளியாகாததால் தொகுதி மக்கள் அதிருப்தியுள்ளனர்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்துடன் திருக்கோவிலூர் இணைப்பு குறித்து அறிவிப்பு வெளியாகாததால் தொகுதி மக்கள் அதிருப்தியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்துடன் திருக்கோவிலூர் இணைப்பு எப்போது ?

விழுப்புரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டபோது, திருக்கோவிலூரை உள்ளடக்கி தொகுதி முழுவதும் விழுப்புரம் மாவட்டத்தில் இடம் பெறும் வகையில் அமைய வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. ஆனால் அப்போதைய அதிமுக அரசு குறிப்பாக அரசியல்வாதிகள் தங்கள் அதிகார பலத்திற்காக திருக்கோவிலுார் மற்றும் 20 ஊராட்சிகளை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேர்த்தனர். இதற்கு வியாபாரிகள் மற்றும் தொகுதி மக்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த எம்.எல்.ஏ., பொன்முடி தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றவுடன் திருக்கோவிலுார், விழுப்புரம் மாவட்டத்தில் இணைக்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்தார். அதற்கு ஏற்ப திருக்கோவிலுார் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பொன்முடி அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.

அரகண்டநல்லுாரில் இருந்து திருக்கோவிலூர் நீதிமன்றம் மற்றும் கிளை சிறைச்சாலை 2 கி.மீ., துாரத்தில் இருக்கும் நிலையில், மாவட்ட பிரிப்பு காரணமாக 20 கி.மீ., துாரத்தில் இருக்கும் திருவெண்ணைநல்லுார் நீதிமன்றத்திற்கு கைதிகளை அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது. நீதிமன்ற காவல் பெற்றால் அங்கிருந்து விழுப்புரம் வழியாக வேடம்பட்டு சிறைக்கு கைதிகளை அழைத்துக் கொண்டு அலையும் அவலத்திற்கு போலீசார் ஆளாகியுள்ளனர்.

இது வழக்குகளை எதிர்கொள்ளும் பொது மக்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. அரகண்டநல்லுார் காவல் ஆய்வாளர் கட்டுப்பாட்டில் இருக்கும் கண்டாச்சிபுரம் காவல் நிலைய வழக்குகள் விழுப்புரத்திற்கு செல்கிறது. இது குற்ற வழக்கு விசாரணையின் நிலை. சிவில் வழக்கு என்றால் கண்டாச்சிபுரம் தாலுகா முழுவதும் விக்கிரவாண்டி நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும். இது வழக்கறிஞர்களுக்கு மட்டுமல்ல வழக்காடிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

இந்த வழக்குகள் எல்லாம் திருக்கோவிலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், மாவட்ட பிரிப்பின் காரணமாக மாற்றப்பட்டு விட்டது.

அனைத்து துறைகளிலும் சிக்கல்

திருக்கோவிலுாரில் சார்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்ட நிலையில் வழக்குகள் அதிகம் இன்றி வழக்கறிஞர்கள் பாதிக்கப்பட்டிருப்பது ஒரு பக்கம் என்றால், சார்பு நீதிமன்றமும் காணாமல் போய்விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இப்படி அனைத்து துறைகளிலும் சிக்கலை சந்தித்து வரும் திருக்கோவிலுார் சுற்றுவட்டார பகுதி மக்கள் சிரமத்தை விளக்கி, சமீபத்தில் விழுப்புரம் வந்த முதல்வர் ஸ்டாலினிடம் திருக்கோவிலுார் தொகுதி முழுதையும் விழுப்புரம் மாவட்டத்தில் சேர்க்க மனு அளித்தனர். இதனைப் பெற்றுக் கொண்ட முதல்வர், பரிசீலிப்பதாக பதில் அளித்திருந்தார்.

இதனால் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத் தொடரில் திருக்கோவிலுார் மற்றும் 20 ஊராட்சிகள் விழுப்புரம் மாவட்டத்தில் இணைக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் மட்டுமல்லாது போலீசார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், அரசியல்வாதிகள் காத்திருந்தனர். ஆனால் அதற்கான அறிவிப்பு வெளியாகாதது தொகுதி மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திருக்கோவிலுார் தொகுதியில் பலமாக எதிரொலிக்கும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

டாஸ்மாக் பணமா? தேர்தல் பணமா? ரூ. 12.42 லட்சம் சிக்கியதால் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பு !
டாஸ்மாக் பணமா? தேர்தல் பணமா? ரூ. 12.42 லட்சம் சிக்கியதால் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பு !
இனி 'திண்டிவனம்' அல்ல, 'திண்டிவளம்' என மாற்றப்படும் - வன்னியரசு
இனி 'திண்டிவனம்' அல்ல, 'திண்டிவளம்' என மாற்றப்படும் - வன்னியரசு
Koovagam Festival 2026: கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெருவிழா கோலாகலமாக தொடக்கம்...
Koovagam Festival 2026: கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெருவிழா கோலாகலமாக தொடக்கம்...
ரயில் ஏற போறீங்களா? நில்லுங்க! புதுச்சேரி - விழுப்புரம் மெமு ரயில் சேவையில் அதிரடி மாற்றம்!
ரயில் ஏற போறீங்களா? நில்லுங்க! புதுச்சேரி - விழுப்புரம் மெமு ரயில் சேவையில் அதிரடி மாற்றம்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாஞ்சில் சம்பத் ஆபாச பேச்சு: முகம் சுழித்த பெண்கள்! – பொதுமேடையில் அநாகரீகத்தின் உச்சம்
நாஞ்சில் சம்பத் ஆபாச பேச்சு: முகம் சுழித்த பெண்கள்! – பொதுமேடையில் அநாகரீகத்தின் உச்சம்
Delimitation: 60 பேரை தேடும் பாஜக..! இன்று மாலை வாக்கெடுப்பு - மக்களவையில் பலத்தை காட்டிடுமா? கணக்குகள் என்ன?
Delimitation: 60 பேரை தேடும் பாஜக..! இன்று மாலை வாக்கெடுப்பு - மக்களவையில் பலத்தை காட்டிடுமா? கணக்குகள் என்ன?
ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று முறை 'கீ' கொடுக்க வேண்டும் - பிரச்சாரத்தில் அண்ணாமலை கிண்டல்
ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று முறை 'கீ' கொடுக்க வேண்டும் - பிரச்சாரத்தில் அண்ணாமலை கிண்டல்
Delimitation: தெற்குக்கு 195, வடக்குக்கு 600+ தொகுதிகள் - மோடி,அமித் ஷா கணக்கில் எங்கே நியாயம்? யாருக்கு ஆபத்து?
Delimitation: தெற்குக்கு 195, வடக்குக்கு 600+ தொகுதிகள் - மோடி,அமித் ஷா கணக்கில் எங்கே நியாயம்? யாருக்கு ஆபத்து?
Jailer 2: இணையத்தில் கசிந்த ஜெயிலர் 2... சுதாரித்த சன் பிக்ச்சர்ஸ்...ஜனநாயகன் தயாரிப்பாளர் இத பண்ணிருக்கனும்
Jailer 2: இணையத்தில் கசிந்த ஜெயிலர் 2... சுதாரித்த சன் பிக்ச்சர்ஸ்...ஜனநாயகன் தயாரிப்பாளர் இத பண்ணிருக்கனும்
Pakistan Power Cut: போரால் வந்த வினை; தட்டுப்பாடான எரிபொருள், கட்டாகும் மின்சாரம்; பாகிஸ்தான் மக்கள் அவதி
போரால் வந்த வினை; தட்டுப்பாடான எரிபொருள், கட்டாகும் மின்சாரம்; பாகிஸ்தான் மக்கள் அவதி
USA Isarael IRAN War: போர் நிறுத்தம் ஓகே ஆகிடுச்சு..! விட்டுக்கொடுத்த ஈரான்? இனி கொலை இல்லை, ட்ரம்பை நம்பலமா?
USA Isarael IRAN War: போர் நிறுத்தம் ஓகே ஆகிடுச்சு..! விட்டுக்கொடுத்த ஈரான்? இனி கொலை இல்லை, ட்ரம்பை நம்பலமா?
Hyundai Hybrid: புதுசா 3 ஹைப்ரிட் மாடல நாங்க இறக்குறோம் - ரெண்டு 7 சீட்டரும் இருக்கு - ஹுண்டாயின் அதிரடி திட்டம்
Hyundai Hybrid: புதுசா 3 ஹைப்ரிட் மாடல நாங்க இறக்குறோம் - ரெண்டு 7 சீட்டரும் இருக்கு - ஹுண்டாயின் அதிரடி திட்டம்
Embed widget