மேலும் அறிய

Tvk Vijay: சாதி, பணம் இருந்தால்தான் பதவி; பிறப்புக்கும் எல்லாம் சமம் என தலைவர் சொல்லி இருக்காரு... ஆனா எங்க ஊரில் சாதி பார்த்துதான் பதவி போடறாங்க

Tamilaga Vettri Kazhagam: பிறப்புக்கும் எல்லாம் சமம் என்று தலைவர் சொல்லி இருக்காரு, ஆனா எங்க ஊரில் சாதி பார்த்து தான் பதவி போடறாங்க , என்னால ஏத்துக்க முடியல,  இருந்தாலும் நான் கட்சிக்கு செயல்படுவேன் - தவெக நிர்வாகி வேதனை

தமிழக வெற்றிக் கழகம் (Tamilaga Vettri Kazhagam) 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதியன்று நடிகர் விஜய் இக்கட்சியைத் தொடங்கினார். அதன் பின்னர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சலை பகுதியில் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாட்டை நடத்தினார்.

தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஓராண்டை நெருங்கும் நிலையில், முதலாம் ஆண்டு நிறைவு விழாவுக்கு முன்னதாகவே நிர்வாகிகள் பட்டியலை வெளியிட த.வெ.க தலைமை தீவிரமாகி வருகிறது இது தொடர்பாக கட்சியின் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் என். ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோரைக் கொண்ட குழு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்சி தொடங்கப்பட்டு வரும் பிப்ரவரி 2-ம் தேதியுடன் ஓராண்டு முடிகிறது. கட்சியின் பொதுச் செயலாளர், பொருளாளர் எனக் குறிப்பிட்ட சிலரின் பொறுப்புகள் குறித்துதான் தகவல்கள் வெளியாகியிருக்கிறதே தவிர, மாவட்டம், ஒன்றியம், பேரூர், பகுதி, வட்ட கழகங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை. கட்சியிலுள்ள அணிகளுக்கும் நிர்வாகிகள் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் பதவிகள் தற்போது ஏலம் விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விழுப்புரம் தமிழக வெற்றி கழகத்தின் வாட்சப் குழுவில் பதவிகள் விலைக்கு தான் வழங்கப்படும் எனவும், நகர செயலாளர் பதவிக்கு ரூபாய் 15 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும் இதனை தளபதி தலையீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழுவில் பதிவு செய்து வருகின்றனர். " பணம் இருந்தால் தான் பதவி என்ன கருமம்டா இது" என ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்...

இந்த நிலையில் மேலும் தமிழக வெற்றிக் கழக தொடர்களின் குமுறல் வெளிவர தொடங்கியுள்ளது, அந்தவகையில் தவெக தொண்டனின் குமுறல்  ஆடியோ வெளியாகியுள்ளது.

அதில், நான் தருமபுரி மாவட்டத்தில் நான் கட்சி வேலை செய்வதற்கு எனக்கு விருப்பமில்லை, அதாவது பொறுப்பாளரா வந்து வேலை செய்ய விருப்பமில்லை, மக்கள் இயக்கமாக இருக்கும் போது நான் விவசாயி அணி ஒன்றிய தலைவரா இருந்தான், இப்போ வேற பொறுப்பு குடுக்க மாற்றங்க,  நான் ஒரு தாழ்த்தப்பட்ட மக்களில் இருந்து வந்தவன். அம்பேத்கருடைய கொள்கையை சேர்ந்தவன் அதனால வந்து உங்களுக்கு ஏதும் தரமுடியாது என்றும் நீ அணித்தலைவர் தான் வேறு பொறுப்பு தர முடியாதுனு சொல்லிட்டாங்க,  நான் எத்தனை வருஷம் உழைச்சேன் 16 வருஷமா இருந்தான், ஆனால் இப்போ வந்தவர்களுக்கு எல்லாம் ஒன்றியத்திலிருந்து பதவி போட்டு இருக்காங்க, எங்க மாவட்ட தலைவர் வந்து சாதி பார்த்து பொறுப்பு கொடுத்தார். அவங்களோட கம்யூனிட்டி பார்த்து ஒன்றிய தலைவருர் பொறுப்பு எல்லாம் கொடுத்து இருக்கிறார். எனுக்கு இது புடிக்கல நான் வெளியே வரேன், அதனாலதான் வந்து வாய்ஸ் போடறன், நான் 30, 40 குரூப்ல இருக்கான், தலைவர் என்ன சொல்லி இருக்காரு... பிறப்புக்கும் எல்லாம் சமம்.. சாதியே நமக்கு கிடையாதுனு தலைவர் சொல்லி இருக்கார். ஆனா எங்க ஊரில் சாதி பார்த்து தான் பதவி போட்டாங்க, என்னால ஏத்துக்க முடியல,  இருந்தாலும் நான் கட்சிக்கு செயல்படுவேன் என தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

அதே குழுவில் மற்றொரு நிர்வாகி ஆடியோ...

தளபதி என்ன சொல்லி இருக்கிறார் என்றால், நாம் அவன் கூட இருக்க வேண்டாம், நல்ல மனசு இருந்தா போதும் நல்ல மனசு நல்ல எண்ணம் இருந்தால் எதையுமே சாதிக்கலம். ஆனா பணம் இன்னைக்கு வரும் நாளைக்கு போகும், இப்போ காசு, பணம் இருப்பவர்களுக்கு தான் சீட்டு எடுத்து போடுவாங்க, ஆனா மக்கள் இயக்கம் ஆரம்பித்து மன்றத்திலிருந்து செலவு செய்தவர்கள் எல்லாம் தெரியும், ஆனா இவங்க கிட்ட காசு இல்ல, சாதி தான் முக்கியம், இது தான் பிரதர் பிரச்சனையை, தளபதியை ஓட்டு போட்டு ஜெயிக்க வையுங்கள், அவங்க நெனச்சு நமக்கு போஸ்ட்டிங்  கொடுத்தால் இறங்கி தீவிரமாக செயல்படுவோம் என தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார்.

இது இப்படி இருக்க, கடந்த நவம்பர் மாதம் விழுப்புரம் மாவட்ட முக்கிய பொறுப்பாளர் ஒருவருக்கு பிறந்தநாள். இதனை கட்சி நிர்வாகிகள் வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளனர். இதற்காக வாட்ஸ்ப் குழு மூலமாக ஒவ்வொரு நிர்வாகியும் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என பதிவிட்டு பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. பிறந்தநாளுக்காக சாலை முழுதும் கொடிகள், பேனர்கள், மண்டபம், பிரியானி விருந்து என தடபுடலாக இந்த பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. இந்த பிறந்தநாள் செலவுகளை மண்டபம் ஒருவர், உணவுக்கு ஒருவர், கேக் ஒருவர், கொடி, பேனர் ஒருவர் என ஆளுக்கொரு செலவை ஏற்றுள்ளனர். பணம் செலவு செய்தவர்களுக்கு எல்லாம் எதிர்காலத்தில் கட்சி பொறுப்பு கிடைக்கும் என முக்கிய நிர்வாகியால் கூறப்பட்டுள்ளது.

மேலும்,தனக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு கிடைக்கப்போவதாகவும், எனவே நான் நியமிப்பவர்தான் கட்சி பொறுப்புகளுக்கு வர முடியும் என கூறிவரும் அந்த முக்கிய பொறுப்பாளர் கட்சி பதவிக்கு ஏற்றால் போல் பணம் பெறப்படுவதாக கூறப்படுகிறது. இதே நிலை தான் கள்ளகுறிச்சி மாவட்டத்திலும் உள்ளதாக நிர்வாகிகள் கூறுகின்றனர். தவெக எனும் கட்சி கட்டமைப்பு ரீதியாக இன்னும் முழுமைபெறாத நிலையில் தற்போதே கட்சி பொறுப்பாளர்கள் பிறந்தநாளுக்கு வசூல், கட்சி பதவிகளுக்கு வசூல், பிட் காயின் முதலீடு என தங்கள் வேலையை காட்ட தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் விழுப்புரம் தமிழக வெற்றி கழகத்தின் வாட்சப் குழுவில் பதவிகள், விலைக்கு தான் வழங்கப்படும் எனவும், நகர செயலாளர் பதவிக்கு ரூபாய் 15 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும் இதனை தளபதி தலையீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழுவில் பதிவு செய்து வருகின்றனர். " பணம் இருந்தால் தான் பதவி என்ன கருமம்டா இது" என ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.

சாதி மற்றும் பணம் அதிகத்துடன் இருப்பவர்களுக்கு மட்டுமே தமிழக வெற்றி கழகம் கட்சியில் பொறுப்புகள் வழங்கப்படுவதாக கட்சி நிர்வாகிகள் தங்களின் குமுறல்களை ஆடியோவாகவும் பதிவுகளாக தவெக குழுவில் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒவ்வொரு பதவிக்கும் பல லட்சங்கள் நிர்ணயம் செய்து வசூல் செய்யும் பணியில் மூத்த நிர்வாகிகள் கைவரிசையை காண்பிக்க ஆரம்பித்துள்ளனர். இத்தகைய சூழலில் கட்சி ஆரம்பித்த ஒரு ஆண்டுக்குள்ளேயே இத்தகை நிகழ்வுகள் நடப்பது கட்சி தடம் மாறி செல்கிறது என்பதை தெரிவிக்கிறது.

மேடையில் வீர வசனம் பேசும் விஜய் தன் முதுகை திரும்பி பார்க்க வேண்டும் என மற்ற கட்சி நிர்வாகிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget