(Source: ECI/ABP News/ABP Majha)
TN Spurious Liquor Death: கள்ளச்சாராயம் உயிரிழப்பு விவகாரம் - விழுப்புரத்தில் முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேட்டி
விழுப்புரம் : கள்ளச்சாராய வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
விழுப்புரம்: கள்ளச் சாராயம் அருந்தி முண்டியம்பாக்கத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின் செங்கல்பட்டு, விழுப்புரம் கள்ளச்சாராய வழக்கினை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யபப்டும் என தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் 34 பேர் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முண்டியம்பாக்கத்தில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதனை தொடர்ந்து முண்டியம்பாக்கத்தில் உள்ள கூட்ட அரங்கில் கடலூர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை சார்ந்த ஆட்சியர் எஸ்பிக்கள் டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோருடன் சட்ட ஒழுங்கு மற்றும் கள்ளச்சாராய தடுப்பு குறித்து ஆய்வு கூட்டம் நடத்தினர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்.....
எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உடனடியாக ஜிப்மர் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், விசாரணையில் மெத்தனால் சாராயத்தினால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தெரிவித்தார். இதே போன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் மெத்தனால் சாராயத்தினால் 5 பேரும் விழுப்புரத்தில் 11பேரும் உயிரிழந்த துயர சம்பவம் ஏற்பட்டுள்தாக கூறினார். மேலும் கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சாராயம் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இரு சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் வழங்கவும், சிகிச்சை பெற்றவர்களுக்கு 50 ஆயிரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். தொழிற்சாலைகளில் மெத்தனால் கலந்த சாராயம் பயன்படுத்துவதை கொண்டு வருவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இரு சம்பவங்களும் சிபிசி ஐ டிக்கு மாற்றம் செய்யபப்டும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்