MP Ravi Kumar: காவிரியில் எந்த பாதிப்பும் ஏற்படுவதற்கு தமிழக அரசு ஒரு போதும் அனுமதிக்காது - எம்பி ரவிக்குமார்
காவிரியில் எந்த பாதிப்பும் ஏற்படுவதற்கு தமிழக அரசு ஒரு போதும் அனுமதிக்காது என்று நம்புவதாக எம்பி ரவிக்குமார் கூறியுள்ளார்.
விழுப்புரம்: கர்நாடகாவில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், மேகதாதுவில் அணைகட்ட வேண்டுமென ஒரே விதமான நிலைபாட்டை கொண்டுள்ளதாகவும், கர்நாடக அரசு அணை கொண்டுவருவதில் மேற்கொள்ளும் முயற்சியில் சட்ட ரீதியாக பாதுகாப்பு தமிழக அரசுக்கு உள்ளதாகவும் இது குறித்து அச்சப்பட தேவையில்லை என்றும் காவிரியில் எந்த பாதிப்பும் ஏற்படுவதற்கு தமிழக அரசு ஒரு போதும் அனுமதிக்காது என நம்புவதாக எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பேட்டியளித்த விழுப்புரம் தொகுதி எம்பி ரவிக்குமார், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அரசு வேலை வாய்ப்புகளில் முதல் பட்டதாரிகள் மற்றும் அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுமென மகத்தான அறிவிப்பை அறிவித்துள்ளதற்கு தமிழக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாகவும், இந்த அறிவிப்பு விழுப்புரம் போன்ற பின் தங்கிய மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்குமென தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவிலேயே உயர்கல்வியில் தேர்ச்சி விகிதம் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது. ஆனால் தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் கல்லூரிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் ஆண்டுக்கு தமிழக அரசு புதியதாக 200 கல்லூரிகளை திறக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை மீனை சைவ உணவில் சேர்க்க வேண்டுமென பரிந்துரை செய்திருக்கிறார். இது மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் ஏற்கனவே இருக்கிற நிலையில் மீனவர்களுக்கு ஆதராவாக அவர் தெரிவித்திருப்பதை தானும் ஆதரிப்பதாகவும், ஆனால் ஒன்றிய அரசு மீன் பிடிப்பதற்கு லைசென்ஸ் வேண்டும் என்ற மசோதாவை கொண்டு வந்தபோது நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்காலிகமாக ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளதாகவும் உண்மையிலையே மீனவர்களுக்கு நல்லது செய்யவேண்டுமென தமிழிசை நினைத்தால் ஒன்றிய அரசிடம் மீனவர்கள் லைசென்ஸ் பெற வேண்டும் என்ற மசோதாவை கைவிட செய்ய வலியுறுத்த வேண்டுமென கூறினார்.
கர்நாடகாவில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், மேகதாதுவில் அணைகட்ட ஒரே விதமான நிலைபாட்டை கொண்டுள்ளனர். கர்நாடக அரசு அணை கொண்டு வருவதில் மேற்கொள்ளும் முயற்சியில் சட்ட ரீதியாக பாதுகாப்பு தமிழக அரசுக்கு உள்ளதாகவும் இது குறித்து அச்சப்பட தேவையில்லை என்றும் காவிரியில் எந்த பாதிப்பும் ஏற்படுவதற்கு தமிழக அரசு ஒரு போதும் அனுமதிக்காது என்று நம்புவதாக எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்