TN 10th Result 2024: மாநில அளவில் 6ம் இடம்; விழுப்புரம் அரசுப் பள்ளிகள் சாதனை! தேர்ச்சி எவ்வளவு தெரியுமா?
Villupuram 10th Result 2024: ஒட்டுமொத்தத் தேர்ச்சி விகிதத்தில் விழுப்புரம் மாவட்டம் மாநில அளவில் 10வது இடத்தினை பெற்றுள்ளது.
![TN 10th Result 2024: மாநில அளவில் 6ம் இடம்; விழுப்புரம் அரசுப் பள்ளிகள் சாதனை! தேர்ச்சி எவ்வளவு தெரியுமா? Tamil Nadu 10th Result 2024 94.11% percent students passed villupuram District - TNN TN 10th Result 2024: மாநில அளவில் 6ம் இடம்; விழுப்புரம் அரசுப் பள்ளிகள் சாதனை! தேர்ச்சி எவ்வளவு தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/10/8e1daf9558d9b89ca903ba8f44d102ed1715318651077739_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம் மாவட்டத் தேர்ச்சி ( Villupuram 10th Result )
பத்தாம் வகுப்பு தேர்வில் விழுப்புரம் மாவட்டம் 90.57 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலிருந்து நடப்பாண்டு 12,414 மாணவர்கள், 11,679 மாணவிகள் என 24,093 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில்,11,456 மாணவர்களும்,11,217 மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் 92.28% மாணவர்கள், 96.04 %மாணவிகள் என மொத்தம் விழுப்புரம் மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 94.11%ஆகும். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
மாநில அளவில் அரசுப் பள்ளிகளில் 6-வது இடம்
இன்று 2023- 2024ஆம் கல்வி ஆண்டிற்கான 10 ம் வகுப்பு மாணவ மாணவியரின் தேர்வு முடிவுகள் அரசுத் தேர்வுகள் துறையால் வெளியிடப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 22673 பேர் தேர்வு எழுதி 94.11 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மாநில அளவில் 10 வது இடத்தினை பெற்றுள்ளது.
இதில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 93.51 ஆகும். மாநில அளவில் அரசு பள்ளிகளில் விழுப்புரம் 6-வது இடம் பெற்றுள்ளது. சென்ற 2022.2023 கல்வியாண்டில் 90.57 சதவிதம் பெற்று விழுப்புரம் மாவட்டம் மாநில அளவில் 24 வது இடத்தில் இருந்த விழுப்புரம், தற்போது 3.54 சதவீதம் உயர்ந்து 94.11 சதவீதம் பெற்று மாநில அளவில் 10 வது இடத்தினை பெற்றுள்ளது.
ALSO READ: Tamil Nadu 10th Result 2024 LIVE: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் லைவ்
முடிவுகளை அறிந்துகொள்வது எப்படி?
- தேர்வு முடிவுகளை, http://tnresults.nic.in அல்லது http://dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகள் வாயிலாக மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
- மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும்.
- மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செயல்படும் தேசியத் தகவலியல் மையங்களில் (National Informatics Centres) 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை அறியலாம்.
- அனைத்து நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
- மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளில் தேர்வு முடிவுகளையும் அறிந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)