மேலும் அறிய
Advertisement
குடுகுடுப்பை வேண்டாம் புத்தகம் தான் வேண்டும் - சாதி சான்றிதழ் கேட்டு கணிக்கர் சமுதாய மாணவ மாணவிகள் முற்றுகை போராட்டம்
குடுகுடுப்பை வேண்டாம் புத்தகம் தான் வேண்டும் - சாதி சான்றிதழ் கேட்டு கணிக்கர் சமுதாயத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் கடலூர் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குடு குடுப்பை உடன் குறி சொல்லும் கணிக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர், கடலூர் அருகே உள்ள பாதிரிகுப்பம், பண்ருட்டி, புதுப்பேட்டை போன்ற பல பகுதிகளில் குடும்பங்களாக வசித்து வருகின்றனர். இந்த கணிக்கர் சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்கு சாதி சான்றிதழ் வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். அதன் படி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கடலூர் அடுத்த பாதிரிகுப்பம் பகுதியில் வசித்து வரும் சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் அவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வழி வகை செய்யும் அப்பொழுதைய கடலூர் வட்டாட்சியர் பலராமன் மற்றும் பாதிரிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் மனுக்கள் பெரும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த நிலையில் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை பகுதியில் 500 க்கு மேற்ப்பட்ட குடும்பங்கள் உள்ளன இதில் 250 க்கு மேற்ப்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர்.இன்று புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த 100 க்கு மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுடன் சாதி சான்றிதழ் வழங்க கோரி கடலூர் சார் ஆட்சியர் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட கணிக்கர்கள் குடும்பத்துடன் குடுகுடுப்பை இசைத்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோர்கள் போல நாங்கள் இனி குடுகுடுப்பு இசைக்க மாட்டோம், ஜோசியம் பார்க்க செல்லமாட்டோம் நன்றாக படித்து அரசு வேலைக்கு செல்ல விரும்புகிறோம் உடனியாக அரசு தங்களுக்கான சாதி சான்றிதழை வழங்க வேண்டும் என கையில் பதாகைகள் ஏந்திய படி கோஷம் எழுப்பினர்.
மேலும் மாணவ மாணவிகள் 11 வகுப்பு மற்றும் கல்லூரி சேர விரும்புவர்களுக்கு சாதி சான்றிதழ் கேட்டு வருகின்றனர். இவர்களுக்கு சாதி சான்றிதழ் இல்லாத்தால் மேற்ப்படிப்பு பயிலமுடியாத நிலை ஏற்ப்பட்டு வருகிறது.இதனால் அரசு உடனடியாக சாதி சான்றிதழ் வழங்க கோரி பல முறை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தும் நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனவும், மேலும் அவர்கள் பேசுகையில் காலம் காலமாக தங்கள் தாய் தந்தை மற்றும் குடும்பத்தினர் அனைவரும் குடு குடுப்பை அடித்தும் ஜோசியம் பார்த்தும் காலத்தை கழித்து வந்தனர்.
அதே போல் நாங்களும் குடு குடுப்பை அடித்து எங்கள் காலத்தை ஓட்ட விருப்பம் இல்லை நாங்கள் படித்து வேலைக்கு செல்லவே விரும்புகிரோம் ஆனால் எங்களிடம் ஜாதி சான்றிதழ் இல்லாத காரணத்தினால் தங்களால் மேற்படிப்பிற்கோ கல்லூரி படிப்பதற்கோ செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது எனவும் வேதனை தெரிவித்தனர்.பின்னர் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் சார் ஆட்சியர் அதியதான்கவியரசு பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதி அளித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion