ரோந்து வாகனத்தை சொந்த காரணங்களுக்காக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை - விழுப்புரம் எஸ்.பி. எச்சரிக்கை
ரோந்து வாகனத்தை சொந்த காரணங்களுக்காக பயன்படுத்தும் காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ரோந்து பணிகளுக்கு செல்லாமல் அரசு வாகனத்தை சொந்த காரணங்களுக்காக பயன்படுத்தும் காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக யாருமில்லாத வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் கொள்ளை சம்பவங்களை தடுக்கும் விதமாக இரவு நேர ரோந்து பணிகளில் ஈடுபடுவதற்கு ஆல்பா ரோந்து வாகன திட்டத்தினை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் கொடியசைத்து துவக்கி வைத்தார். ரோந்து பணிகளை மேற்கொள்ளும் காவலர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட இரு சக்கர வாகனத்தை வழங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வினை தொடங்கி வைத்த பின் பேசிய எஸ் பி சசாங்ப்சாய், "இரவு நேர ரோந்து பணிகளில் ஈடுபடும் காவலர்கள் பணி செய்யாமல் ஏமாற்றினாலோ அல்லது வழங்கப்பட்ட வாகனத்தை தனது சொந்த காரணங்களுக்காக பயன்படுத்தினால் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென" எச்சரிக்கை செய்தார். மேலும் சில தினங்களில் ரோந்து காவலர்களுக்கு பாடி கேமராவும் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்