"நான் ஜெயில் பறவைடா" ஒரே நாளில் 100 வழக்கு வாங்குனவன் நான் - சீறிய சீமான்
தெருவுக்கு தெரு டாஸ்மாக் திறந்து வைத்துவிட்டு சட்டம் ஒழுங்கு எப்படி சரியா இருக்கும் - சீமான்

விழுப்புரம்: ஒரே நாளில் நூறு வழக்கு வாங்குனவன் நான் தான் என்றும் வடிவேல் சொல்லுவது போல் சிறை பறவை தான், கல்லூரிக்கும் செல்லும் போதெல்லாம் கள்ளு குடித்துவிட்டு சென்றதாக நாம் தமிழர் ஒருங்கினைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அருகேயுள்ள பூரிகுடிசை கிராமத்தில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பாக கள் விடுதலை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு மேடையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைபாளர் சீமான், கள் எமது உணவு, கள் எமது உரிமை என்ற முழக்கத்தை மென்னெடுத்து கள் விடுதலை மாநாடு நடைபெற்றதாகவும், தமிழனின் தேசிய பாணம் கள் என்றும் கள் என்கிற பெயர் தான் பிரச்சினையா... பனம்பால் மூலிகைச் சாறு என்று பெயர் வைத்திடலாம் என கூறினார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர், டாஸ்மாகில் விற்கின்ற மது என தீர்த்தமா?. மற்ற மாநில முதலமைச்சர்களுக்கு மது ஆலைகள் இல்லை, ஆனால் தமிழ்நாட்டை ஆண்ட அனைத்து முதலமைச்சர்களுக்கு மது பான ஆலைகள் உள்ளதாகவும், தெருவுக்கு தெரு டாஸ்மாக் திறந்து வைத்துவிட்டு சட்டம் ஒழுங்கு எப்படி சரியா இருக்கும் என கேள்வி எழுப்பினார்.
கள்கடை திறந்துவிட்டால் டாஸ்மாக் படுத்துவிடும், அதிகாரம் நிரந்தரமில்லை, ஒரே நாளில் நூறு வழக்கு வாங்குனவன் நான்தான் கிரிக்கெட்டில் இல்லை, வடிவேல் சொல்லுவது போல் சிறை பறவை நான் என்றும் கள்ளில் தான் கலப்படம் இருப்பதாக தடை செய்கிறார்கள். ஆனல் பீச்சில் இருக்கிற சமாதி மேல ஆனையாக சரக்குல கலப்படம் இல்லையா என கேளி செய்தார். அரசு பள்ளி கல்லூரிக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவதால் ஆய்வு செய்ய வேண்டும், அரசு ஒரு போதும் கள் தடையை நீக்க மாட்டார்கள். அதனை நாம் எடுத்துகொள்ள வேண்டும் விடுதலை என்பது பெறுவது அல்ல தருவது.
ஈரோட்டு தேர்தலில் நிற்க வேண்டியவன் மாநாட்டில் பங்கேற்கிறேன் என்றால் அது கொடுத்த வாக்குறுதிக்காக மட்டுமே என தெரிவித்தார். பெரியார் இல்லை என்றால் அரசியலே இல்லை என்றார்கள் இந்தியம், திராவிடம் இல்லை என்றால் அரசியல் இல்லை என்றார்கள். ஆனால் கொலைகாரன் என்று சொன்ன பிராபாகரனை தலைமை ஏற்று அரசியல் செய்பவன் நான் என்றும்
பெரியாரும் இல்லை சிறியாரும் இல்லை வந்தவன் போனவன் கிட்ட நாட்டை கொடுத்துவிட்டு நான்கு மூன்று சீட்டுக்காக முட்டிகால் போடுபவன் நான் அல்ல சீமான் ஆவேசமாக தெரிவித்தார். பிரபாகரனுடன் தான் நிக்கிற படத்தை தொலைக்காட்சியில் காட்ட வைச்சவன் தான் என்றும் கல்லூரிக்கு செல்லும் போதே கள்ளு குடித்துவிட்டு சென்றதாகவும், கல்லூரிக்கு செல்வதே கள்ளு குடிப்பது, கபடி விளையாடுவது, படத்திற்கு செல்வதுமாக இருந்தாக சீமான் கூறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

