ரூம் கொடுத்தாங்க.. நாற்காலி கூட இல்லை - தரையில் அமர்ந்து பணி செய்யும் திமுக எம்எல்ஏ
அறை ஒதுக்கினாலும் மேசை, நாற்காலி வழங்கவில்லை; தரையில் அமர்ந்து பணி செய்யும் திமுக எம்எல்ஏ
புதுச்சேரி மாநிலம் முதலியார் பேட்டை தொகுதி எம்எல்ஏ சம்பத். இவருக்கு புதுச்சேரி சட்டப் பேரவை வளாகத்தில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரது அறையில் மேசை, நாற்காலி உள்ளிட்ட எதுவும் அமைத்து தரப் படவில்லை. இதனால் எம்எல்ஏ சம்பத் தனது தொகுதி மக்களை தரையில் அமர்ந்தபடி சந்தித்து வருகிறார். எதிர்க்கட்சியான திமுக எம்எல் ஏவை அவமதிக்கும் விதமாகவே இது போன்று செய்துள்ளது என ஆளும் அரசு மீது அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Udhayanidhi Stalin Profile: திமுகவின் அடுத்த 'தளபதி' உதயநிதியின் கதை!!
இது தொடர்பாக அவர் கூறுகையில், சட்டப் பேரவை வளாகத்தில் நூறு சதுர அடி கொண்ட அலுவலகம் ஒதுக்கப்பட்டது. 40 ஆயிரம் பொதுமக்களை சந்திக்க வேண்டியுள்ளது. மக்களின் நலனுக்காக ஆளும் அரசை அதிகம் கேள்வி கேட்டதாலும், மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களை ரூ.5 லட்சம் மருத்துவ பாதுகாப்பு திட்டத்தில் சேர்க்கவும், ரூ.5 ஆயிரம் மழை நிவாரணம் அனைவருக்கும் வழங்க அனைத்து சட்டப் பேரவை உறுப்பினர்களையும் போராட அழைத்தது மற்றும் சாலை அமைக்காத அரசை கண்டித்து சொந்த செலவில் சாலை அமைத்தது உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த பணிகளை அரசுக்கு எதிராக செய்ததால் தன்னை அவமானப்படுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக ஒதுக்கப்பட்ட அலுவலக அறையில் மேசை, நாற்காலிகள் கூட அமைத்து தரவில்லை.
H Raja : இது நடக்காத வரைக்கும் தமிழ்நாட்டுக்கு விடியலே கிடையாது: சாபம் விட்ட ஹெச்.ராஜா
நான் ஏழ்மை, எளிமை நிலையில் இருந்து தான் இந்த இடத்துக்கு வந்தேன். அதனால் நாற்காலி இல்லையென்றாலும் தரையில் அமர்ந்து மக்கள் பணி செய்ய முடியும். ஆனால் இந்த அவல நிலையை உருவாக்கிய என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு நியமன எம்எல்ஏக்களுக்கு விசாலமான அறை, சொகுசு நாற்காலிகள், சொகுசு கார்கள் வழங்க மட்டும் நிதி ஒதுக்குகிறது என்றார்.
Vaiko: பிரபாகரனுக்காக மழை கூட நின்றுவிட்டது - வைகோ
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்