விழுப்புரத்தில் ஏரிக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்...! ஆஞ்சநேயர் கோயிலையும் இடிக்க சொல்லி வீடுகளை இழந்தவர்கள் போராட்டம்
வழக்கு தொடந்த கார்த்தி என்பவருக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோயிலை முதலில் இடிக்க சொல்லி மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
விழுப்புரம் மாவட்டம் வளவனூரை அடுத்த இளங்காடு கிராமத்தில் ஏரிக்கரையை ஆக்கிரமித்து 17 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வந்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கார்த்திக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 17 வீடுகளை இடிக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு, கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டார். இதையடுத்து சம்பந்தப்பட்ட பொது மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைவாக வீடுகளை காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.
RS Bharathi on Jayakumar: ‘சட்ட அமைச்சராக இருந்தவருக்கு சட்டம் தெரியாதா?’ கலாய்த்த R.S பாரதி
‘5 மாநில தேர்தல்.. அடுத்து தமிழகத்தை குறிவைக்கும் பாஜக’ எச்சரித்த திருமா
ஆனால் அவர்கள் உடனடியாக காலி செய்யவில்லை. இப்படியே பல மாதங்கள் ஓடின. இந்த சூழலில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க அவகாசம் முடிந்தது. இதையடுத்து வருவாய் வட்டாட்சியர் ஆனந்த்குமார் தலைமையில் அதிகாரிகள் போலீசார் பாதுகாப்புடன் இன்று சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றனர். அப்போது வீடுகளை இடிக்க ஜேசிபி இயந்திரமும் கொண்டு வந்தனர். வீடுகளை இடிக்கும் போது ஏரிக்கரை பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலை இடிக்காமல், வீடுகளை இடிக்க முயன்றனர். இதன் காரணமாக வருவாய்த்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சாலை விபத்து விவரம்.. தவறான டேட்டா தரும் L&T.. கடுப்பான எம்.பி
வெளியே வந்த ஜெயகுமார்...கலாய்த்த மா.சு...ஜெயகுமார் VS மா.சு | Jayakumar
இது வழக்கு தொடர்ந்த கார்த்திக் என்பவருக்கு சொந்தமான கோயில் என்பதால், அந்த கோயிலை இடித்துவிட்டு வீடுகளை இடிக்க வேண்டுமென வாக்குவாதம் செய்தனர். இதனையடுத்து போலீசார் முன்னிலையில் கோயிலை இடித்துவிட்டு வீடுகளை இடித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்