தைலாபுரம் தான் பாமக அலுவலகம்..! ராமதாஸ் பரபரப்பு பிரஸ் மீட்
பாமகவில் கூட்டணியையும் வேட்பாளரை தான் தான் முடிவு செய்வேன் என அன்புமணி கூறியது தான் பிரச்சனை - ராமதாஸ்

விழுப்புரம்: பாமகவில் கூட்டணியையும் வேட்பாளரை தான் தான் முடிவு செய்வேன் என அன்புமணி கூறியது தான் பிரச்சனை என்றும் பணத்தை வைத்து கொண்டு கட்சியில் சிலரை விலைக்கு வாங்கி பொய் பொய்யாக அன்புமணி கூறுவதாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்.,
அன்புமணி நிறை பொய்களையும் கட்டுக்கதைகளையும் கட்சி தொண்டர்களிடம் பரப்பி வருவதாகவும், அன்புமணி தைலாபுரத்தில் தன்னை சந்தித்தபோது கதவை மூடிக்கொண்டு பார்க்க மறுத்ததாக அன்புமணி தெரிவிக்கிறார். நான் ஏன் பேச மறுக்கபோகிறேன்? என்றும் 46 ஆண்டு காலம் கட்டி காப்பாத்தி வைத்த கட்சியை அன்புமணியிடம் கொடுக்க வேண்டும் கட்சி நிர்வாகிகள் யாரையும் சந்திக்க கூடாது என அன்புமணி தெரிவிப்பதாக கூறினார்.
அய்யா அய்யா என்று சொன்னவர்களை ராமதாஸ் என்று சொல்ல வைத்தது அன்புமணி தான். கட்சி அங்கீகாரம் இல்லாமல் சின்னம் இல்லாமல் இருக்கிறது. வருகிற சட்டமன்ற தேர்தலில் கட்சி கூட்டணி வேட்பாளர், கட்சி அங்கீகாரம் செய்வது சம்மந்தமாக நிறுவனர் என்ற முறையில் முடிவெடுத்ததை எதிர்த்து, நான் தான் கட்சி வேட்பாளர், கூட்டணியை முடிவு செய்வேன் என்று கூறியது தான் பிரச்சனை. பாமகவை அன்புமணியிடம் கொடுத்துவிட்டு தைலாபுரம் இல்லதில் கதவை சாத்திகொண்டு கொள்ளு பேரண்கள் விளையாடுவதை பார்க்க முடியாது, கடைசி மூச்சு வரை பாட்டாளி மக்களுக்காக உழைப்பேன் மக்கள் என் மேல் உயிரை வைத்துள்ளார்கள்.
என்னை சந்திக்க வருபவர்களை சந்திக்க விடமால் நிறைய வேலைகளை செய்து வருகின்றனர். கிரேனில் ஆப்பிள் மாலை போடுவது, நூறு கார் போவது எல்லாம் கட்சி கொள்கைக்கு எதிரானது. வீடு வீடாக கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்திக்க முடியவில்லை என வருத்தம் உள்ளது. அதை தான் அன்புமணியை செய்ய கோரினேன் அதனை செய்யவில்லை.
கட்டுக்கடங்காத மனக்குமுறலை ஊடகமுன்பு கூறுவதன் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதாக தெரிவித்தார். எதிரிகள் கூட என் மீது கேவலமான விமர்சனங்களை வைத்ததில்லை, சமூக வலைதளங்களில் தன்னை கேவலமாக எழுதி வருகிறார்கள் அமைதியாக இருந்து கொண்டு இதனை அன்புமணி செய்து வருகிறார், பாமக இரண்டாக உள்ளது போன்று அன்புமணி அவரே ஏற்படுத்தி கொண்டிருக்கிறார். குடும்பம் 40 பேர் கொண்டதாக இருந்தது பத்தாக மாறியுள்ளது. குடும்பத்திற்குள்ளாகவே விளையாடி கொண்டிருக்கிறார். பொதுக்குழு அறிவித்தவுடன் போட்டியாக அன்புமணி பொதுக்குழு அறிவிக்கிறார்.
பணத்திற்கு ஒரு கூட்டம் அன்புமணியிடம் சுற்றி கொண்டு இருக்கிறார்கள் பொறுப்புகளை உருவாக்கி வளர்த்த பிள்ளைகளை தன்னை திட்டுவதற்காக அன்புமணி மாற்றி உள்ளார். சமூக வலைதளங்களில் தன்னை திட்டுவதற்கு அன்புமணி மாற்றி இருந்தாலும் அவர்கள் மேல் எனக்கு கோவம் இல்லை, பொதுச்செயலாளராக இருந்த வடிவேல் ராவணை மந்திரம் மாயம் போட்டு இனோவா கார் வாங்கி கொடுத்து அன்புமணி மாற்றியுள்ளார். நல்ல பேச்சாளர் நல்ல சிந்தனையாளர் வடிவேல் ராவணனுக்கு காரை கொடுத்து வளைச்சி போட்டிருக்கிறார்.
அறிவுரை அன்புமணிக்கு கூறினால் அதை அவர் ஏற்க மாட்டார், முயலுக்கு நாலு என்று கூறினால் அவர் மூன்று கால் என தெரிவிப்பார்.
மாம்பழ சின்னம் ஒதுக்கியதாக கூறுவது பொய்யானது, தேர்தல் நேரத்தில் மட்டுமே சின்னம் ஒதுக்கீடு செய்வார்கள் பொய்யான தகவலை தெரிவிக்கிறார்கள். கட்சியின் அங்கீகாரமும், சின்னமும் போய் விட்டது, தன்னை சட்டமன்ற உறுப்பினர்களாக அன்புமனி ஆக்கிவிடுவார் என சிலர் அன்புமணியிடம் சுற்றி கொண்டிருக்கிறார்.தனக்கு தெரியாமலையே அன்புமணி வீட்டில் கட்சி அலுவலகத்தினை அவரது வீட்டிற்கு மாற்றி உள்ளார்.
கட்சியாக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் தைலாபுரம் தோட்டம் தான் சட்டப்படியும் தேர்தல் ஆணையத்திடம் தைலாபுரம் தான் பாமக அலுவலகம் என கொடுத்துள்ளதாகவும் சட்டப்படி வெற்றி கிடைக்கும் என தெரிவித்தார்.





















