Puducherry Power Shutdown: மக்களே உஷார்... புதுச்சேரியில் நாளை மின்தடை ; எந்தெந்த பகுதி தெரியுமா?
Puducherry Power Shutdown 24.04.2025: புதுச்சேரியில் 24-04-2025 அன்று பல்வேறு இடங்களில் காலை 10.00 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

Puducherry Power shutdown: புதுச்சேரியில் நாளை 24.04.2025 வில்லியனுார் - காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி மின்பாதை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் (காலை 10:00 மணி முதல் 2:00 மணி வரை) அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியின் வியாழக்கிழமை (24.04.2025) நாளை மின் தடை
வில்லியனுார் - காலாப்பட்டு மின்பாதை பராமரிப்பு பணிகள்
மின்தடை நேரம் : காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை
பிம்ஸ் மருத்துவமனை, சுனாமி குடியிருப்பு, மத்திய சிறைச்சாலை, ஷாஷன் நிறுவனம், ஸ்டடி பள்ளி, நவோதயா வித்யாலயா பள்ளி, சட்ட கல்லுாரி, அம்மன் நகர், டி.ஏ.வி.பள்ளி, பெரியகாலாப்பட்டு மேற்கு பகுதி, புதுச்சேரி பல்கலைக்கழகம் ஊழியர்கள் குடியிருப்பு, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஆலங்குப்பம், சஞ்சிவி நகர், கருவடிக்குப்பம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகள்.
பிள்ளைச்சாவடி மின்பாதை:
மின்தடை நேரம் : காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை
சின்னகாலாப்பட்டு, புதுநகர், மேட்டு தெரு, பிள்ளைச்சாவடி, அன்னை நகர், வி.சி.குடியிருப்பு, எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மையம், புதுச்சேரி பல்கலைக்கழகம் கலாசார வளாகம், பெரியகாலாப்பட்டு, கனகசெட்டிக்குளம், உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.
அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்
எனவே பொதுமக்கள் முன்கூட்டியே அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் எனவும் செல்போன் சார்ஜ் போட்டுக் கொள்ளவும் மேலும் குடிநீர் போன்றவற்றை முன்னெச்சரிக்காது சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும் என மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.