மேலும் அறிய
தமிழ் பாரம்பரியம் மீது காதல்... தமிழ் முறைப்படி இங்கிலாந்து காதல் ஜோடி திருமணம்...!
ஆரோவில்லில் தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்ட இங்கிலாந்து காதல் ஜோடி.

தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்ட இங்கிலாந்து தம்பதி
விழுப்புரம்: ஆரோவில்லில் வெளிநாட்டு காதல் ஜோடி தமிழ் பாரம்பரியத்தின் மீது கொண்ட காதலால் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் மைக்கேல். இவரது மகன் அலன் வயது 28. இவரும் இங்கிலாந்தில் உள்ள லியோ (வயது 28) ஆகிய இருவரும் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் ஆரோவில் வந்த அவர்கள் இங்கேயே தங்கி அலன் ஆரோவில்லில் விவசாய பணி செய்து வருகிறார். அவரது காதலி ஆரோவில்லில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் தமிழ் மீது கொண்ட தீரா காதல் காரணமாக தமிழர்களின் பாரம்பரிய முறைகள் உடைகள் போன்றவற்றின் ஈர்ப்பு காரணமாக அவர்கள் இருவரும் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இந்நிலையில், கடந்த வாரம் ஆரோவில்லில் உள்ள ஒரு பள்ளியில் தமிழர்கள் முறைப்படி வேட்டி சேலை அணிந்து மாங்கல்யம் கட்டி திருமணம் செய்து கொண்டனர். இந்த செயல் அப்பகுதியில் உள்ள தமிழர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ் மீது கொண்ட காதலால் தமிழர் முறைப்படி திருமணம் செய்து கொண்ட வெளிநாட்டு தம்பதியை அப்பகுதி தமிழ் ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion