மேலும் அறிய

பாஜக பிரமுகர் நடு ரோட்டில் வெட்டி கொலை - பின்னணியில் அமைச்சர் உள்ளாரா?

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என்னையும், என் குடும்பத்தையும் பழிவாங்கும் நோக்கில் பொய் செய்தி பரப்பி வருகின்றனர்.

புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக பிரமுகர் நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் பின்னணியில் அமைச்சர் இருப்பதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில், அமைச்சர் ஒருவர் பின்னணியில் இருப்பதாக, கொலை செய்யப்பட்டவரின் தந்தை அளித்துள்ள புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி, சாமிபிள்ளை தோட்டத்தைச் சேர்ந்தவர் உமாசங்கர் (38). இவர், காமராஜர் நகர் தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர். தொழிலதிபர் சார்லஸ் மார்ட்டின் பிறந்த நாள் விழா, கருவடிக்குப்பம் பகுதியில் உள்ள பாரிஸ் திருமண நிலையத்தில் நேற்று கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை உமாசங்கர் கவனித்தார். நேற்று முன்தினம் இரவு, விழா ஏற்பாடுகளை பார்த்துவிட்டு, இரவு 11:45 மணியளவில் உமாசங்கர் வெளியே வந்த போது, அங்கு ஐந்து இருசக்கர வாகனத்தில் வந்த 10 பேர் கும்பல், உமாசங்கரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. இதில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

லாஸ்பேட்டை போலீசார், சடலத்தை மீட்டனர். கொலை காரணமாக கருவடிக்குப்பத்தில் பதற்றம் ஏற்பட்டது. உமாசங்கர், புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு உபகரணங்களை கொண்டு விளையாட்டு முகாம் அமைக்கும் தொழில் செய்து வந்தார். இதே தொழிலை செய்து வரும் மற்றொரு கும்பலுடன் தொழில் போட்டி இருந்துள்ளது. இதனால் கொலை செய்யப்பட்டாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.

இதற்கிடையே, உமாசங்கரின் தந்தை காசிலிங்கம், லாஸ்பேட்டை போலீசில் கொடுத்துள்ள புகாரில், 'என் மகன் கொலை பின்னணியில், புதுச்சேரி ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன் உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

இந்த புகாரை மறுத்து அமைச்சர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், 'அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என்னையும், என் குடும்பத்தையும் பழிவாங்கும் நோக்கில் பொய் செய்தி பரப்பி வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. இதை பரப்புவோர் மீதும், குற்றச்சாட்டுகளை தெரிவித்தவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளேன்' என, தெரிவித்துள்ளார். இதற்கிடையே, இந்த கொலை தொடர்பாக, சந்தேகத்தில் 11 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

ஆடிப்பூர வளைகாப்பு உற்சவம்: விழுப்புரம் மாவட்டமே ஆன்மிகக் கடலில் மூழ்கியது!
ஆடிப்பூர வளைகாப்பு உற்சவம்: விழுப்புரம் மாவட்டமே ஆன்மிகக் கடலில் மூழ்கியது!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
விழுப்புரம் அருகே பரபரப்பு: ஓடும் கண்டெய்னர் லாரியில் திடீர் தீ விபத்து - ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!
விழுப்புரம் அருகே பரபரப்பு: ஓடும் கண்டெய்னர் லாரியில் திடீர் தீ விபத்து - ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
Embed widget