புதுச்சேரி கடற்கரையில் அதிர்ச்சி! கோலிபார்ம் பாக்டீரியா 16 மடங்கு உயர்வு - காரணம் என்ன?
புதுச்சேரி: காலாப்பட்டு கடற்கரையில், 900 எம்.பி.என்., மலகோலிபார்ம் பாக்டீரியா இருப்பது பகுப்பாய்வில் தெரிய வந்துள்ளது

புதுச்சேரி கடற்கரையில் கோலிபார்ம் பாக்டீரியா
புதுச்சேரி குருசுக்குப்பம் கடற்கரையில், மலகோலிபார்ம் பாக்டீரியா, 16 மடங்கு அதிகரித்துள்ளதாக, தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
புதுச்சேரியில் தேங்காய்த்திட்டு, குருசுக்குப்பம், காலாப்பட்டு கடற்கரைகளில், மலகோலிபார்ம் பாக்டீரியா அதிகரித்துள்ளதாக, அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆய்வுகளை மேற்கோள்காட்டி, நாளிதழ்களில் கடந்த ஜூன் 9ல் செய்தி வெளியானது. இதனால் வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படும் எனவும், அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு, இந்த வழக்கை சென்னையில் உள்ள தென் மண்டல அமர்வுக்கு மாற்றியது. தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி, புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமஉறுப்பினர் செயலர் ரமேஷ் அறிக்கை தாக்கல் செய்த மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும், தேசிய நீர் தர கண்காணிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, புதுச்சேரியில் காலாப்பட்டு, குருசுக்குப்பம், தேங்காய்த்திட்டு கடற்கரைகளில் நீரின் தரம் ஆய்வு செய்யப்பட்டது.
100 மி.லி., நீரில், 100 எம்.பி.என்., அளவு மல கோலிபார்ம் பாக்டீரியா இருக்கலாம். ஆனால், குருசுக்குப்பம் கடற்கரையில், 1,600 எம்.பி.என்., தேங்காய்த்திட்டு கடற்க ரையில், 900 எம்.பி.என்., காலாப்பட்டு கடற்கரையில், 900 எம்.பி.என்., மலகோலிபார்ம் பாக்டீரியா இருப்பது பகுப்பாய்வில் தெரிய வந்துள்ளது.
இத்தகவல், புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளருக்கு கடிதம் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விவாதிக்க, கடந்த ஜூன் 11ல் புதுச்சேரி பொதுப்பணித் துறை அமைச்சர் தலைமையில் உயர்நிலை கூட்டம் நடந்தது. இந்த மூன்று கடற்கரைகளிலும் கோலிபார்ம் அளவை குறைக்க, கடலில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்பட வேண்டும்.
இதற்காக அனைத்து வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு பாதாள சாக்கடை வசதியை ஏற்படுத்துதல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
லாஸ்பேட்டை, ராயப்பேட்டை, திப்கனகன் ஏரி ஆகிய மூன்று கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் கிருமிநாசினி செயல்முறை மேற்கொள்ளப்படுகிறது. புதுச்சேரியின் அனைத்து பகுதிகளிலும் பாதாள சாக்கடை இணைப்பு செப்டம்பருக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோலிபார்ம் பாக்டீரியா
கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் அசையும் அல்லது அசையாத கிராம்-எதிர்மறை வித்து உருவாக்கும் பேசிலி என வரையறுக்கப்படுகின்றன, அவை 35–37 °C என்ற உகந்த வளர்ச்சி வெப்பநிலையில் அமிலங்கள் மற்றும் வாயுக்களை உற்பத்தி செய்ய β-கேலக்டோசிடேஸைக் கொண்டுள்ளன. அவை ஏரோப்கள் அல்லது ஃபேகல்டேட்டிவ் ஏரோப்களாக இருக்கலாம், மேலும் அவை உணவுகள், பால் மற்றும் நீரின் குறைந்த சுகாதாரத் தரத்தின் பொதுவாகப் பயன்படுத்தப்படும் குறிகாட்டியாகும் . கோலிஃபார்ம்கள் நீர்வாழ் சூழலில், மண்ணிலும் தாவரங்களிலும் காணப்படுகின்றன.
அவை இரைப்பை குடல் அமைப்பில் வசிப்பதாக அறியப்படுவதால், அவை வெப்ப இரத்தம் கொண்ட விலங்குகளின் மலத்தில் உலகளவில் அதிக எண்ணிக்கையில் உள்ளன. கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் பொதுவாக கடுமையான நோய்க்கான காரணமாக இல்லாவிட்டாலும், அவற்றை வளர்ப்பது எளிது, மேலும் அவற்றின் இருப்பு மலம் சார்ந்த பிற நோய்க்கிருமி உயிரினங்கள் ஒரு மாதிரியில் இருக்கலாம் அல்லது அந்த மாதிரியை உட்கொள்வது பாதுகாப்பானது அல்ல என்பதை ஊகிக்கப் பயன்படுகிறது . இத்தகைய நோய்க்கிருமிகளில் நோயை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் , வைரஸ்கள் அல்லது புரோட்டோசோவா மற்றும் பல பலசெல்லுலார் ஒட்டுண்ணிகள் அடங்கும் . ஒவ்வொரு குடிநீர் ஆதாரத்திலும் இந்த மொத்த கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் உள்ளதா என சோதிக்கப்பட வேண்டும் .





















