சோகம்... நேருக்கு நேர் கார் மோதி விபத்து ; காவலர் உட்பட 4 பேர் உயிரிழப்பு
புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டு அருகே இரண்டு கார் நேருக்கு நேர் மோதி விபத்தில் விழுப்புரம் காவலர் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டு அருகே இரண்டு கார் நேருக்கு நேர் மோதி விபத்தில் விழுப்புரம் காவலர் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
விழுப்புரம் அருகே உள்ள முட்டைத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் விழுப்புரத்தில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பானம்பட்டு பகுதியைச் சேர்ந்த வீரப்பன் மகன் சந்திரன் என்பவருடைய வாடகை காரில் தனது மனைவி ஏஞ்சலின் தங்கை சுசிலா பிரசன்னா மகள் ஷானிபர்லி(12) ஆகியோருடன் காரில் விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது கார் புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டு மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தது அப்பொழுது எதிர் திசையில் விழுப்புரம் மாவட்டம் எல் ஆர் பாளையம் பகுதியைச் சேர்ந்த கதிரவன் என்பவர் தனது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த முகிலன் என்பவர் உடன் காரில் வந்து கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக இரண்டு காரும் நேருக்கு நேர் பலமாக மோதிக் கொண்டது.
இதில் காரில் பயணம் செய்த கதிரவன், முகிலன், சந்திரன், பிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். இதில் சுசிலா பிரசன்னா ஏஞ்சலின் ஹானி பர் ஆகியோர் பலத்த காயங்களுடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
இது குறித்து தகவல் அறிந்த வில்லியனூர் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாகனங்களை அப்புறப்படுத்தி இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரத்தில் தூக்க கழகத்தில் வாகனத்தை போட்டியதால் விபத்து ஏற்பட்டதா எனவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரத்தில் எதிரெதிரே இரண்டு கார்கள் மோதிக் கொண்டு நான்கு நபர்கள் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

