"சேராத இடம் தன்னில் சேர்ந்தாயோ" - எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்த பொன்முடி
"சேராத இடம் தன்னில் சேர்ந்தாயோ" என்ற பாடலை பாடி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்தார் முன்னாள் அமைச்சர் பொன்முடி.

விழுப்புரம்: முகையூர் பகுதியில் திமுக நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் "சேராத இடம் தன்னில் சேர்ந்தாயோ" என்ற பாடலை பாடி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்தார் முன்னாள் அமைச்சர் பொன்முடி.
விழுப்புரம் மாவட்டம் முகையூர் பகுதியில் திமுக நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சர்ருமான பொன்முடி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
மேடையில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி.,
'சேராத இடம் தன்னில் சேர்ந்தாயோ என்ற பாடல் வரிகளை மேற்கோள் காட்டி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்தார். அதிமுக சேராத நபர்களுடன் தற்போது கூட்டணி வைத்துள்ளது. இதனால் எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் மட்டுமல்லாது இனி எந்த தேர்தலிலும் வெற்றி பெறாது வருகின்ற சட்டமன்ற தேர்தல் மட்டுமல்லாது அனைத்து தேர்தலிலும் நிரந்தர முதலமைச்சர் ஆக தளபதி திகழப் போகிறார் என்று பேசினார். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என ஏராளமான கலந்து கொண்டனர்.





















