திக் திக் நிமிடங்கள்... மூக்கில் கயிறை விட்டு வாய் வழியே எடுத்த யோகா கலைஞர்; அதிர்ச்சியில் உறைந்த மக்கள்
மூத்த யோகா கலைஞர் ஒருவர் மூக்கில் கயிறை விட்டு வாய் வழியே எடுத்த சம்பவம் பார்ப்போரை அதிர்ச்சியில் வாழ்த்தியது.
புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபெற்று வரும் சர்வதேச யோக தினவிழாவில் பனிக்கட்டிகள் மீது யோகாசனம் செய்து அசத்தியதோடு களரி கலைஞர்கள் யோகாசனத்தோடு களரி கலைகளை ஆக்ரோஷத்துடன் செய்து காட்டியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை சார்பில், 30-வது சர்வதேச யோகா திருவிழா புதுச்சேரி கடற்கரை சாலை பழைய துறைமுக வளாகத்தில் நடந்து வருகிறது.
விழாவையொட்டி நடந்த யோகா போட்டிகளில் புதுச்சேரி, ஆந்திரா, டெல்லி, குஜராத், அரியானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்பட அனைத்து மாநிலங்களில் இருந்தும் ஆயிரத்து 208 பேர், இருபாலர் பிரிவிலும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.
தொடர்ந்து யோகா நித்ரா பயிற்சி, போட்டிகள், பயிலரங்கங்கள், கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று காலை புதுவை கடற்கரை சாலையில் யோகா செயல் விளக்கம் மற்றும் மூச்சு பயிற்சி விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆரோவில் களரி கிராமம் சார்பில் களரி வீரர்கள் தமிழரின் பாரம்பரிய கலையான களரியை யோகாசனத்தோடு செய்தனர். அதன்படி கைப்போர் முறை, ஈட்டி, வாள், கேடயம், குறுந்தடி, குத்துவாள் சண்டை, சுருள்கத்தி வீசுதல், சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை செய்தனர் அப்பொழுது எதிரிகளை வீழ்த்த வீரர்கள் ஒருவருக்கொருவர் ஆக்ரோஷமாக தாக்கிக் கொள்வதைப் போல் சண்டையிட்டுக் கொண்டது அங்கிருந்த புதுச்சேரி மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மேலும், இதில் மூத்த யோகா கலைஞர் ஒருவர் மூக்கில் கயிறை விட்டு வாய் வழியே எடுத்த சம்பவம் பார்ப்போரை அதிர்ச்சியில் வாழ்த்தியது.
யோகா
யோகா என்ற சொல் சமஸ்கிருதச் சொல் ஆகும். "யோகா என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர்.
ஆசனம் என்ற சொல்லுக்கு 'இருக்கை' என்பது பொருள். உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும் சொல்லே யோகாசனம். தமிழில் இதை ஓக இருக்கை என்றழைக்கலாம்.
யோகாசனம்= யோகா+ஆசனம், அதாவது மனதை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்தி செய்யப்படும் உடற்பயிற்சி என்று பொருள். மனதை அலைபாயாமல் தடுப்பதற்கே பெரும்பாலான யோக உடற்பயிற்சிகளில் கண்களை மூடிக்கொள்கின்றனர். மேலும் யோகாசனங்கள் அனைத்தும் மானிட உடம்பில் உள்ள பருப்பொருள்களுக்காகவே (தசை, எலும்பு, ஈரல்) செய்யப்படுகின்றன. சில யோகாசனங்கள் இரத்த ஒட்டத்தை சீர்படுத்தினாலும் அவை இரத்த ஒட்டத்திற்காக மட்டும் செய்யப்படும் பயிற்சி ஆகாது. இதைப் போலவே சில யோகாசனங்கள் சுவாசத்தைச் சீர்ப்படுத்தினாலும், சுவாசம் சீர்ப்படுத்தலுக்கு என்று சுவாச பந்தனம், பிராணயாமா போன்ற தனிப்பயிற்சிகள் உள்ளன. அதனால் யோகாசனம் என்பது உடற்பயிற்சியும் அவை சார்ந்த நிலைகளும் மட்டுமே.