மேலும் அறிய

கடலூர் : நண்பனை கடத்திய கும்பல்... விரட்டி பிடித்த போலீசார்..!

திட்டக்குடி அருகே நண்பனை கடத்திய கும்பலை போலீசார் விரட்டி பிடித்தனர். தப்பி ஓடிய பூமாலை, முருகன் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

திட்டக்குடி அருகே நண்பனை கடத்திய கும்பலை போலீசார் விரட்டி பிடித்தனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள ஏ.அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். (55)  இவருடைய நண்பர் விருத்தாச்சலம் தொட்டிகுப்பத்தை சேர்ந்த குமார் (45) இருவரும் துபாயில் ஏழு வருடங்களாக ஒன்றாக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியா வந்துள்ளனர்.
 
இரண்டு வருடத்திற்கு முன்பு குமார் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 90 பேரிடம் தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் வாங்கி கிருஷ்ணனிடம் கொடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 18-08-2022 அன்று குமார் மற்றும் அவரது நண்பர்களான கிழ்ச்சுருவாயைச் சேர்ந்த செல்வராஜ், ஆனந்தன், பூமாலை, முருகன் ஆகிய ஐந்து பேரும் கிருஷ்ணனை தனது மகள் வழி பேத்தி மஞ்சள் நீராட்டு விழாவிற்கு பொருள் வாங்க திட்டக்குடி பேருந்து நிலையம் சென்றவரை, டாட்டா ஏசி வாகனத்தில் குமாரும் அவருடைய நண்பர்கள் ஐந்து பேரும் ஏற்றிக்கொண்டு கடத்தி சென்றுள்ளனர்.
கடலூர் : நண்பனை கடத்திய கும்பல்... விரட்டி பிடித்த போலீசார்..!
 
கிருஷ்ணனின் மகன் அன்புச்செல்வன் திட்டக்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்  திட்டக்குடி காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் பொறுப்பு கிருபாலட்சுமி மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் காவலர்கள் கிழ்ச்சிறுவாயில்  செல்வராஜ் என்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த கிருஷ்ணனை மீட்டனர். போலீசாரை பார்த்தவுடன் தப்பிவிட முயன்ற நிலையில் போலீசார் கிருஷ்ணனை கடத்திச் சென்ற குமார்,செல்வராஜ், ஆனந்தன், மூவரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய பூமாலை, முருகன் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
 

 
திமுக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் - தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் பேச்சு!
 

கடலூர் : நண்பனை கடத்திய கும்பல்... விரட்டி பிடித்த போலீசார்..!
 
மக்களை சிரமப்படுத்துவதில் நம்பர் 1 மாடல் அரசாக தி.மு.க செயல்படுகிறது என த.மா.கா., தலைவர் வாசன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
 
கடலுாரில் த.மா.கா., சார்பில், மூப்பனார் பிறந்தநாளையொட்டி நடந்த விவசாயிகள் தின பொதுக்கூட்டத்தி்ல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், ”நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கான நிதிநிலை அறிக்கையில், கடந்த ஆண்டைவிட 5.6 மடங்கு கூடுதலாக ரூ. 1.24 கோடி நிதி அளித்துள்ளது. மேலும், சிறு குறு விவசாயிகளின் நலனையொட்டி, ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் நிதியுதவி, பயிர் காப்பீடு உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
 
விவசாயிகள் நலனுக்காக பொறுப்புடன் பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்திவரும் நிலையில், அதற்கு மாறாக, விவசாயிகளை வஞ்சிக்கின்ற வகையில் தமிழக அரசு செயல்படுவது வேதனையாக உள்ளது. இந்தியாவிலேயே, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஒரே அரசு தி.மு.க.,தான். வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றாலும், சொத்துவரி, மின்சார வரி என வரிகளை உயர்த்தி மேலும் மேலும் மக்களை சிரமப்படுத்துவதில்லை நம்பர்– 1 மாடல் அரசாக தி.மு.க., திகழ்கிறது. எப்போது இந்த ஆட்சி முடியும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
 
 தமிழகத்தில் விவசாய விளை பொருட்களுக்கு விலை இல்லை. இடு பொருட்கள் கொடுப்பதில்லை. மழை, வெள்ள பாதிப்புக்கு நிவாரணம் வழங்குவதில்லை. சட்டசபை தேர்தலின்போது, நகைக்கடை தள்ளுபடி என்றார்கள். அதையும் செய்யவில்லை. சட்டமன்ற தேர்தலின்போது, நகையை அடகு வையுங்கள் திரும்பி கொடுக்கிறோம் என்றார்கள். ஆனால், தரவில்லை. எனவே, நகைகளை வைத்து ஏமாற்றப்பட்டவர்களிடம் தி.மு.க., மன்னிப்பு கேட்க வேண்டும். எனவே, வரும் லோக்சபா தேர்தலில், இதற்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.
 

 
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.


மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget