மேலும் அறிய

முதல்வர் தொழில் முதலீடு... எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது? - ராமதாஸ் கேள்வி

கடந்த பிப்ரவரி மாதம் ஸ்பெயின் சென்ற முதல்வர் ₹3440 கோடி ஒப்பந்தம் செய்தார். ஆனால் இதுவரை ஒரு ரூபாய் கூட முதலீடு வரவில்லை.

விழுப்புரம்: திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு கொண்டுவந்த முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:

கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும். 2023ம் ஆண்டு துபாய் சென்ற முதல்வர் ₹6100 கோடி மூதலீடு ஈர்க்க கையெழுத்திட்டார். கடந்த பிப்ரவரி மாதம் ஸ்பெயின் சென்ற முதல்வர் ₹3440 கோடி ஒப்பந்தம் செய்தார். ஆனால் இதுவரை ஒரு ரூபாய் கூட முதலீடு வரவில்லை. சென்னையில் நடந்த முதலீட்டார் மாநாட்டில் எவ்வளவு முதலீடு வந்தது என தெரியவில்லை. எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்தது என்று தெரிவிக்கவேண்டும்.

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டில் திமுகவின் துரோகத்தை மக்கள் மன்னிக்கமாட்டார்கள். தகவல் பெறும் உரிமை பெரும் சட்டத்தின் கீழ் அரசு வெளியிட்ட தகவல்கள் திரிக்கப்பட்டவையாகும். 35 ஆண்டுகால வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும். தகவல்களின் கால அவகாசம் ஒரே மாதிரி இல்லை. இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று முடிவெடுத்த திமுக தவறான தகவல்களை வெளியிட்டு வருகிறது.

சாதிவாரி மக்கள் தொலை கணக்கெடுப்பு குறித்து அமைச்சரவையில் முடிவெடுக்கவேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு. இதை உச்சநீதிமன்றமும், பாட்னா உயர்நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. ஆகஸ்ட் 13ம் தேதி நடைபெறும் அமைச்சரவைக்கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்கவேண்டும். 

தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் வைக்க வேண்டும் என்ற சட்டத்தை வணிகர்கள் மதிக்கவேண்டும் என்று அமைச்சர் சாமிநாதன் எச்சரித்தும் அதை யாரும் பொருட்படுத்தவில்லை. இதற்கான தமிழைத்தேடி என்று சென்னை முதல் மதுரைவரை பயணம் செய்தேன். அப்போதே அரசு வணிகர்களுக்கு அறிவுறுத்தியது. குறிப்பிட்ட காலத்திற்குள் பெயர் பலகை தமிழில் உள்ளதை அரசு உறுதி செய்யவேண்டும்.

சென்னை, பழவந்தாங்கலில் உள்ள பள்ளியில் மாணவர் ஒருவர் கஞ்சா புகைத்தது அதிர்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸாரின் சோதனையில் 10 ஆயிரம் கஞ்சா வணிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என சொல்லப்பட்டும் எப்படி கஞ்சா விற்பனை நடைபெறுகிறது என்றால் இதற்கு காவல்துறை உடந்தை என்றே தெரிகிறது.

காவிரி ஆற்றில் மணல் குவாரிகளை மூடவேண்டும். காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டும் பாசனப்பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேராததற்கு மணல் கொள்ளையே காரணமாகும். பாசன வாய்க்கால்களை முழுமையாக தூர்வார வேண்டும். 

மீனவர்கள் 22 பேரில் 19 பேரை விடுதலை செய்த இலங்கை 3 பேருக்கு தலா ரூ 40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசின் இந்த தண்டனை கண்டிக்கதக்கதாகும். எனவே இரு நாட்டு மீனவர்களும் காலகாலமாக மீன் பிடிக்கும் இடத்தில் மீன் பிடிக்க இரு நாட்டு அரசும் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். 

கந்து வட்டி கொடுமையால் திருப்பத்தூரில் தாய், மகள் இருவர் தற்கொலை செய்து கொண்டனர். இவரின் கணவர் ஜோலார்பேட்டையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தமிழகத்தில் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது. எனவே கடுமையான தண்டனைகளுடன் புதிய கந்துவட்டி தடை சட்டத்தை அரசு இயற்றவேண்டும். 

நாடு என்பது எல்லையால் வரையறுக்கப்பட்டாலும் மக்களின் வரையறை என்பது குறித்து 15 ஆண்டுகள் மாபெரும் ஆய்வு நடத்தப்பட்டது. 4694 சமுதாயங்கள்தான் இந்தியா என அறிவிக்கப்பட்டு 43 தொகுப்புகளாக அறிவிக்கப்பட்டு 7 சூழல் பண்பாட்டு மண்டங்கலங்களாக பிரிக்கப்பட்டு 364 சமுதாயங்கள் தமிழகத்தில் உள்ளதாக இந்திய மானுடவியல் அமைப்பு அறிவித்துள்ளது. சமுதாயங்கள் ஒருங்கிணைந்து ஒரு நாட்டை உருவாக்குகிறது. தமிழகத்தின் உண்மையான மேம்பாடும், அமைதியையும் பெற அனைத்து சமூகமும் நல்லிணக்கத்துடன் வாழவேண்டும். இதுவே வலிமையான, வளமாக, அமைதியான சமூகத்தை உருவாக்க முடியும்.  

இட ஒதுக்கீடு ஆணையத்திற்கு காலக்கெடு நிர்ணயித்து இருப்பது பம்மாத்து வேலையாகும். வக்பு வாரிய சட்டத் திருத்தம் குறித்து கலந்து பேசி முடிவெடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மருத்துவர் மீது தாக்குதல்; காவல்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? - காவல் ஆணையர் விளக்கம்
மருத்துவர் மீது தாக்குதல்; காவல்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? - காவல் ஆணையர் விளக்கம்
“கத்திக்குத்துப்பட்ட மருத்துவர் பாலாஜி யார், அவர் எப்படி?” வெளியான புதிய தகவல்..!
“கத்திக்குத்துப்பட்ட மருத்துவர் பாலாஜி யார், அவர் எப்படி?” வெளியான புதிய தகவல்..!
"கத்திக்குத்து நடந்த இடத்திற்கே சென்ற துணை முதல்வர்” மருத்துவமனையில் உதயநிதி அதிரடி ஆய்வு..!
Doctors Strike: அச்சச்சோ! தமிழ்நாடு முழுவதும் டாக்டர்கள் ஸ்ட்ரைக் - பகீர் கிளப்பும் பின்னணி!
Doctors Strike: அச்சச்சோ! தமிழ்நாடு முழுவதும் டாக்டர்கள் ஸ்ட்ரைக் - பகீர் கிளப்பும் பின்னணி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Woman Murder:  சிறுநீர் கழித்த பெண் வியாபாரி! வெட்டிக் கொன்ற ரவுடி! சென்னையில் பகீர்!Seeman NTK : சீமானுக்கு ஆப்புவைக்கும் ஆடியோ! உளவுத்துறைக்கு அதிரடி டாஸ்க்! சிக்கலில் நாம் தமிழர்Guindy doctor stabbed : அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து! HOSPITAL-ல் பகீர்! வட மாநிலத்தவர் கொடூரம்Hosur Fake Doctors : ’’10th படிச்ச நீ டாக்டரா?’’ டோஸ் விட்ட அதிகாரிகள்! வசமாய் சிக்கிய பெண்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மருத்துவர் மீது தாக்குதல்; காவல்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? - காவல் ஆணையர் விளக்கம்
மருத்துவர் மீது தாக்குதல்; காவல்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? - காவல் ஆணையர் விளக்கம்
“கத்திக்குத்துப்பட்ட மருத்துவர் பாலாஜி யார், அவர் எப்படி?” வெளியான புதிய தகவல்..!
“கத்திக்குத்துப்பட்ட மருத்துவர் பாலாஜி யார், அவர் எப்படி?” வெளியான புதிய தகவல்..!
"கத்திக்குத்து நடந்த இடத்திற்கே சென்ற துணை முதல்வர்” மருத்துவமனையில் உதயநிதி அதிரடி ஆய்வு..!
Doctors Strike: அச்சச்சோ! தமிழ்நாடு முழுவதும் டாக்டர்கள் ஸ்ட்ரைக் - பகீர் கிளப்பும் பின்னணி!
Doctors Strike: அச்சச்சோ! தமிழ்நாடு முழுவதும் டாக்டர்கள் ஸ்ட்ரைக் - பகீர் கிளப்பும் பின்னணி!
Exclusive : “அதிமுக, தவெகவை பாஜக கூட்டணியில் இணைக்க முயற்சி?” ஜி.கே.வாசன் பிரத்யேக பேட்டி..!
Exclusive : “அதிமுக, தவெகவை பாஜக கூட்டணியில் இணைக்க முயற்சி?” ஜி.கே.வாசன் பிரத்யேக பேட்டி..!
Breaking News LIVE 13 Nov : அரசு மருத்துவரை கத்தியால் குத்திய நபரிடம் காவல் ஆணையர் விசாரணை
Breaking News LIVE 13 Nov : அரசு மருத்துவரை கத்தியால் குத்திய நபரிடம் காவல் ஆணையர் விசாரணை
Jharkhand Polls: ஜார்ஜ்கண்டில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு, 1.37 கோடி வாக்காளர்கள், பிரியங்கா வசமாகுமா வயநாடு?
Jharkhand Polls: ஜார்ஜ்கண்டில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு, 1.37 கோடி வாக்காளர்கள், பிரியங்கா வசமாகுமா வயநாடு?
KL Rahul : சிஎஸ்கேவில் விளையாட ரெடி.. ராகுல் கொடுத்த மறைமுக ஹிண்ட்
KL Rahul : சிஎஸ்கேவில் விளையாட ரெடி.. ராகுல் கொடுத்த மறைமுக ஹிண்ட்
Embed widget