காணாமல் போன மகனை தேடி 21 முறை புதுச்சேரி வந்த மூதாட்டி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு
தூத்துக்குடியில் இருந்து காணாமல் போன மகனை தேடி 21 முறை புதுச்சேரி வந்த மூதாட்டி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு கொடுத்தார்.
தூத்துக்குடியில் இருந்து காணாமல் போன மகனை தேடி 21 முறை புதுச்சேரி வந்த மூதாட்டி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு கொடுத்தார். தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்தவர் பேச்சியம்மாள் (70). இவரது மகன் ரவி (38). ஊரில் வேலையின்றி சுற்றி திரிந்த இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ரவி புதுச்சேரி வந்துள்ளார். அப்போது அவர் விபத்தில் சிக்கி புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக பேச்சியம்மாளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
Ilayaraja | “70 ஆண்டுகளாக தெய்வீக குரலால் மக்களை மயக்கியவர் லதா மங்கேஷ்கர்”... கலங்கிய இளையராஜா
இதைத் தொடர்ந்து தனது மகனை தேடி பேச்சியம்மாள் புதுச்சேரி வந்து உள்ளார். அரசு ஆஸ்பத்திரிக்கும் வந்து விசாரித்துள்ளார். ஆனால் அவர் சிகிச்சை முடிந்து சென்றுவிட்டதாக ஆஸ்பத்திரி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவ்வப்போது புதுச்சேரி வந்து மகனை பல இடங்களில் தேடியுள்ளார். புதுவையில் உள்ள காவல் நிலையங்களிலும் மகனின் படத்தை காண்பித்து கண்டுபிடித்து தருமாறு கூறியுள்ளார். இருப்பினும் மகன் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
Actor Vijay | தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்துடன் கைகோர்க்கிறாரா புதுச்சேரி முதலமைச்சர்?
Sylendra Babu | ரோல் மாடல்... ஆட்டோ டிரைவரை நேரில் அழைத்து பாராட்டிய சைலேந்திர பாபு | Auto driver
இது தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து தெரிவிக்குமாறு மூதாட்டியிடம் சிலர் கூறி உள்ளனர். இதைத் தொடர்ந்து அவர் முதலமைச்சர் ரங்கசாமியை சட்டமன்ற வளாகத்தில் சந்தித்து தனது மகனை கண்டுபிடித்து தருமாறு மனு அளித்தார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் முதலமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார். மகனை தேடி இதுவரை 21 முறை புதுச்சேரி வந்துள்ளதாகவும், ரூ.60 ஆயிரம் வரை செலவழித்திருப்பதாகவும் பேச்சியம்மாள் செய்தியார்களிடம் கூறினார். சிலர் அவருக்கு உதவிடும் நோக்கில் பணம் கொடுத்த போது அதை அவர் வாங்க மறுத்து விட்டார். என்னிடம் பணம் உள்ளது, எனக்கு எனது மகன் தான் வேண்டும் என்று வேதனையுடன் கூறியது கல்நெஞ்சையும் கரைப்பதாக இருந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்