மேலும் அறிய

மக்கள் முதல்வராக இருக்க வேண்டும் என்று நினைத்தால் முதலில் உங்கள் அமைச்சர்கள் வீடுகளுக்கு ரெய்டு அனுப்புங்கள் - பிரேமலதா விஜயகாந்த்

மக்கள் முதல்வராக இருக்க வேண்டும் என்று நினைத்தால் முதலில் உங்கள் அமைச்சர்கள் வீடுகளுக்கு ரெய்டு அனுப்புங்கள்

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் தேமுதிக சார்பில் முப்பெரும் விழா தேமுதிகவின்  பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்று நலத்திட்டங்களை வழங்கினார். அதனை தொடர்ந்து  முப்பெரும் விழா மேடையில் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்த் நல்லா இருக்காரு. பேசுவதிலும், நடப்பதிலும் தான் கொஞ்சம் தொய்வு உள்ளது. மக்களை சந்திக்க வேண்டிய நேரத்தில் நிச்சயம் வருவார். நாம் தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் போன்று, கோடி, கோடியாக கொள்ளை அடிக்கவில்லை. சொந்த பணத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றோம்.

இடத்தை விற்பனை செய்து, மதுரையில் கட்சி துவங்கியபோது மாநாடு நடத்தினோம். நானா பணத்திற்கு ஆசைப்பட்டவள். தமிழகத்தில் மின் கட்டண உயர்வு ஒரு பக்கம் மற்றும் ஒரு பக்கம் மின்வெட்டு பிரச்னை உள்ளது.  காட்பாடியில் துரைமுருகன் பங்கேற்ற விழாவில், மூன்று முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த விழாவில், துரைமுருகன் புறப்பட்டுவிட்டார். இதன் பிறகு பொறியாளர்கள் இரண்டுபேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அப்படி என்றால், உங்களுக்கு மின் தடை வந்தால் சஸ்பெண்ட், மக்களுக்கு வந்தால் என்ன செய்ய போகிறீர்கள்.

நீட் ஒழிப்பு, டாஸ்மாக் ஒழிப்பு, குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் என்று எல்லாமே பொய்யான வாக்குறுதிகள் கூறினர். பொய்யான ஆட்சி அமைத்துள்ளனர். தி.மு.க., என்றால் தில்லு முல்லு கட்சி என்பதை மீண்டும் நிருபீத்துள்ளீர்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் போட்டியிட யாருக்கு தைரியம் உள்ளது. தேர்தல் வரும்போது பணம் கொடுத்து உங்களை ஏமாற்றும் அரசியல் வாதிகள் யார் மற்றும் உண்மையான அரசியல்வாதி யார் என யோசிச்சு முடிவு செய்யுங்கள். கடவுள் அருள் இருந்தால் மீண்டும் வருவார் விஜயகாந்த். அப்படி வந்தால், நீங்கள் அவருக்கு ஓட்டுபோட்டு முதல்வராக ஆக்குவீர்களா என்று பார்ப்போம்.

மக்கள் முதல்வராக இருக்க வேண்டும் என்று நினைத்தால் முதலில் உங்கள் அமைச்சர்கள் வீடுகளுக்கு ரெய்டு அனுப்புங்கள் - பிரேமலதா விஜயகாந்த்

தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், அ.தி.மு.க., அமைச்சர்கள் வீட்டிற்கு ரெய்டிற்கு அனுப்புவது. அதுவும் ஆட்சி முடிந்து ஓய்வெடுக்கும் அமைச்சர்கள் வீட்டிலும், ஒரே அமைச்சர் வீட்டிற்கு பத்து முறை அனுப்புவீர்கள். அப்ப உங்க அமைச்சர்கள் யோக்கியர்களா. மக்கள் முதல்வராக இருக்க வேண்டும் என்று ஸ்டாலின், நினைத்தால் முதலில் உங்கள் அமைச்சர்கள் வீடுகளுக்கு ரெய்டு அனுப்புங்கள். அப்படி உங்கள் அமைச்சர்கள் உத்தமர்கள் என்று நிருபியுங்கள். வீடு, வீடாக பணம் கொடுத்து உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளீர்கள்.

தமிழகத்தில் நதி நீர் இணைப்பு முக்கியம். தி.மு.க.,–அ.தி.மு.க., ஆட்சியில் எந்த அணையும் கட்டவில்லை. தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், 1000 தடுப்பணை கட்டுவதாக தேர்தல் அறிக்கையில் கூறினர். எங்கயாவது கட்டியுள்ளார்களா. நதிநீர் இணைப்பு, தடுப்பணை உள்ளிட்ட தண்ணீர் சேமிக்க எந்த திட்டமும் இன்றைக்கு இல்லை. மீண்டும் ஆந்திரா, கர்நாடகாவில் தண்ணீர் கேட்டு தி.மு.க., அரசியல் செய்ய போவதை நாம் பார்க்க தான் போகிறோம். இந்த அரசு உடனடியாக தடுப்பணைகள் கட்ட வேண்டும்.

பள்ளி, கல்லுாரிகளுக்கு அருகில் கஞ்சா, குட்கா விற்பனை அதிகரித்துள்ளது. இதை தடுக்க வேண்டிய தி.மு.க., இதற்கு காரணம் மத்திய அரசு தான் என கூறுகின்றனர். மத்திய அரசில் இருந்து தான் கஞ்சா கடத்தப்பட்டு வருகின்றது. எதை கேட்டாலும், மத்திய அரசு மீதும், கடந்த ஆட்சி மீதும் பழிபோடுகின்றனர். மக்களை ஏமாற்றும் ஆட்சியாக தி.மு.க., உள்ளது. தமிழகம் பல லட்சம் கோடி கடனில் உள்ளது. ஒவ்வொரு மனிதர்கள் மீதும் 900 ரூபாய் கடன் உள்ளது.

உண்மையில் தி.மு.க.,–அ.தி.மு.க., தான் இங்கு நடந்த மொத்த ஊழலுக்கும் காரணம். ஒவ்வொருவர் மீதும் உள்ள கடன் சுமை பொறுப்பை தி.மு.க.,–அ.தி.மு.க., வினர் ஏற்றுக்கொண்டு, கடன் சுமை இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும். அப்படி உங்களால் முடியவில்லை என்றால், தே.மு.தி.க., ஒருநாள் ஆட்சிக்கு வரும்போது, கடன் இல்லாத மாநிலமாக மாறும். கஞ்சா, குட்காவை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும். டாஸ்மாக் வருமானத்தை வைத்து தான் தமிழக அரசு நடப்பதாக அமைச்சர் செந்தில்பாலாஜி, வெட்கம் இல்லாமல் கூறுகின்றார். தி.மு.க., கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

பெண்களுக்கு ஆயிரம் கொடுப்பதாக கூறிவிட்டு, அதைக்கேட்டால் தற்போது மாணவிகளுக்கு கொடுப்பதாக ஏமாற்றுகின்றனர். டில்லியில் கெஜ்ரிவால் ஊழல் இல்லாத ஆட்சி நடத்துகின்றார். அதை அவரிடம் ஒரு அட்வைஸ் கேட்டு ஸ்டாலின் ஊழல் இல்லாத ஆட்சி நடத்த வேண்டும். இலவச கல்வி, மருத்துவம், சாலை வசதி ஏற்படுத்தினால் தான் உண்மையான நல்ல ஆட்சி. பக்கத்து மாநிலங்களை பார்த்தால், தமிழகத்தில் மின்கட்டணம் குறைவு என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகின்றார்.

எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடுங்கள். நாங்கள் அதற்கு எல்லாம் அஞ்ச மாட்டோம். கெஜ்ரிவால் குஜராத்தில் போட்டியிட வாக்குறுதியாக 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாக கூறியுள்ளார். அவரால் எப்படி 300 யூனிட் கொடுக்க முடிகிறது என்று கெஜ்ரிவாலிடம் கேளுங்கள். முதல்வருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம். இதனால், தற்போது போட்டோ சூட் நடத்துகின்றார். கிழியாத சட்டையை கிழித்துக்கொண்டு எதிர்கட்சியாக இருந்தபோது, போட்டோவிற்கு போஸ் கொடுத்தார். தற்போது, கோட் சூட் போட்டு போஸ் கொடுக்கின்றார். சிங்கப்பூருக்கு இணையான சென்னை என்று கூறி சீரழிக்கும் வேலையை தான் இரண்டு ஆட்சிகளும் செய்து வருகின்றனர். டாஸ்மாக் கடைகளை படி படியாக அகற்றி, போதை இல்லாத தமிழகமாக மாற்ற ஸ்டாலின் மாற்ற வேண்டும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Embed widget