மேலும் அறிய
Advertisement
தீட்சிதர்கள் சார்பில் சிதம்பரம் நடராஜர் கோயில் கோபுரத்தில் ஏற்றப்பட்ட தேசிய கொடி
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் உள்ள நடராஜப் பெருமானிடம் வெள்ளித்தட்டில் தேசியக் கொடியை பூஜித்து மேளதாளத்துடன் கோவிலின் 152 அடி உயரமுள்ள கிழக்கு கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது
இந்தியா முழுவதும் இன்று அனைத்து மாநிலங்களிலும் 73வது குடியரசு தின விழா கொரோனா கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதே போல் கடலூர் மாவட்டத்திலும் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் இல்லாமல் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதே போல் கடலூர் மாவட்டம் சிதம்பரம் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தின் குடியரசு தின விழாவை முன்னிட்டு கிழக்கு கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. 1947 ஆண்டு முதல் இந்திய சுதந்திரம் பெற்றது முதல், இன்றுவரை சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்களில் சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் உள்ள நடராஜப் பெருமானிடம் வெள்ளித்தட்டில் இந்திய தேசியக் கொடியை வைத்து பூஜித்து மேளதாளத்துடன் ஊர்வலமாக கோவிலின் நான்கு பிரகாரங்களும் சுற்றிவந்து கோவிலின் கிழக்கு கோபுரமான 152 அடி உயரமுள்ள கிழக்கு கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
எழுபத்தி மூன்று ஆண்டுகளாக சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தில் ஆசியாவிலேயே சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் தான் 152 அடி உயரமுள்ள கிழக்கு கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இன்று காலையில் நடராஜ பெருமானுக்கு ஆறு மணி அளவில் தீபாரதனை நடந்து முடிந்தவுடன் பொது தீட்சிதர்கள் வெள்ளித் தட்டில் இந்திய தேசியக் கொடியை வைத்து மேள தாளத்துடன் நடராஜ பெருமானின் திருவடியில் நமது தேசிய கொடியினை வைத்து பூஜித்து 73வது குடியரசு தினம் பொது தீட்சிதர்கள் சார்பில் கொண்டாடப்பட்டு கிழக்கு கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது, கொடி ஏற்றிய உடன் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன இது சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில் நடைபெற்றது.
இதற்கு முன்னதாக இந்திய திருநாட்டின் 73-வது குடியரசு தின விழாவினை முன்னிட்டு கடலூர் மஞ்சக்குப்பம் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் காலை 8.05 மணியளவில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் அவர்களுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட காரணத்தினால் இன்று மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) திரு.ரஞ்ஜீத் சிங், அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார், பின்னர் நமது தேசிய கொடியின் மூன்று வர்ணம் பொருந்திய பலூன்களை காற்றில் பொறுப்பு ஆட்சியர் மற்றும் கடலூர் மாவட்ட காவல் கணகாணிப்பாளர் ஆகியோர் பறக்க விட்டனர், அதனை தொடர்ந்து திறந்த ஜீப்பில் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டு, தங்களது பணிகளை சிறப்பாக செய்த அரசு ஊழியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion