குழந்தைகளுக்கு தாய் பாலே வழங்குவதில்லை; 1 லட்சத்து 40 ஆயிரம் குழந்தைகளுக்கு ஊட்டசத்து குறைபாடு - அமைச்சர் பொன்முடி
தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் குழந்தைகளுக்கு ஊட்டசத்து குறைபாடு உள்ளது - அமைச்சர் பொன்முடி
விழுப்புரம்: தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய் பாலே வழங்குவதில்லை என்றும் தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் குழந்தைகளுக்கு ஊட்டசத்து குறைபாடு உள்ளதாகவும் சமுதாயத்தில் சமத்துவமாக இருப்பது மிகவும் முக்கியம், முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை கிண்டலாக பேசினாலும் அதையெல்லாம் பெரிதாக எடுத்து கொள்ளாமல் செயல்படுபவர் தான் தமிழக முதல்வர் எனவும் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
விழுப்புரம் நகர பகுதியான கீழ்பெரும்பாக்கத்தில் சமூக நலன் மற்றுன் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைத்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் 6 மாதம் முதல் 6 வயது வரை ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டத்தினை அமைச்சர் பொன்முடி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் மஸ்தான் சமூக நலன் மற்றும் மகளிர் துறை அரசு முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக், எம் எல் ஏக்கள் லட்சுமணன், புகழேந்தி ஆட்சியர் பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
அமைச்சர் பொன்முடி பேசியதாவது....
எல்லா மதத்தினரும் ஜாதியினரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அண்ணா கூறியதை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி கொண்டிருப்பதாகவும் உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கியர் தான் தமிழக முதல்வர் என்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இடஒதுக்கீட்டினை வழங்கி இலவசமாக உயர் கல்வி பயில நடவடிக்கை எடுத்துள்ளார் என பெருமிதம் தெரிவித்தார். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தினை முதல்வர் துவங்கியுள்ளதாகம், தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய் பாலே வழங்குவதில்லை என்றும் செறிவூட்டப்பட்ட பிஸ்கெட்டினை ஊட்டச்சத்து குறைபாடுள்ள வழங்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டு தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் குழந்தைகள் ஊட்டசத்து குறைபாடு உள்ளதாகவும் இதில் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 4 ஆயிரம் குழந்தைகள் பாதிக்கபட்டுள்ளதாக கூறினார். சமுதாயத்தில் சமத்துவமாக இருப்பது மிகவும் முக்கியம், முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை கிட்டலாக பேசினாலும் அதையெல்லாம் பெரிதாக எடுத்து கொள்ளாமல் செயல்படுபவர் தான் தமிழக முதல்வர் என அமைச்சர் பொன்முடி கூறினார்.
சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறியதாவது :-
தமிழகத்தில் அங்கன் வாடியில் 36 லட்சம் குழந்தைகள் உள்ளதில் 44 ஆயிரம் குழந்தைகள் இருதய பிரச்சனை போன்ற பல்வேறு அறுவை சிகிச்சை தேவை படுகின்ற குழந்தைகள் கண்டெடுக்கபட்டு உயர்ரக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், பெண்கள் கருவுற்ற பின் அதன் பின்னர் வரக்கூடிய ஆயிரம் நாட்கள் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டும், தாய்மார்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டுமென தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்