மேலும் அறிய

காணாமல் போன தந்தையை 23 ஆண்டுக்கு பின் கண்டுபிடித்த மகன் - நெகிழ்ச்சி தருணம்

காணாமல்போன தூத்துக்குடியை சேர்ந்த தொழிலாளி 23 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மீட்கப்பட்டார். எங்களுடைய பிரார்த்தனை வீண்போகவில்லை என்று அவரது மகன் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி கனியம் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 46). இவர் அப்பகுதியில் கிணறு வெட்டும் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், தாமஸ் என்ற மகனும் உள்ளனர். கடந்த 1999-ம் ஆண்டில் வீட்டை விட்டு வெளியே சென்ற வேல்முருகன், அதன் பிறகு வீடு திரும்பவே இல்லை. அவரை பல்வேறு இடங்களில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தேடிப்பார்த்தும் எந்தவொரு தகவலும் தெரியவில்லை.   இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சென்னை குரோம்பேட்டை பகுதியில் சுற்றித்திரிந்த ஒருவரை பசியில்லா தமிழகம் என்ற அமைப்பினர் மீட்டு விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமத்தில் சேர்த்தனர். பின்னர் அவருக்கு முடிதிருத்தம், முக சவரம் செய்து குளிக்க வைத்து உரிய சிகிச்சை அளித்துள்ளனர்.



காணாமல் போன தந்தையை 23 ஆண்டுக்கு பின் கண்டுபிடித்த மகன் - நெகிழ்ச்சி தருணம்

அவரிடம் பேச்சு கொடுத்தபோது அவர், தன்னுடைய பெயர் வேல்முருகன், தன்னுடைய ஊர் ஆறுமுகநேரி என்றும் தனது பெற்றோர் செல்லத்துரை, குருவம்மாள் என்று மட்டும் மாறி, மாறி கூறி வந்துள்ளார். மற்ற எந்தவொரு விவரமும் அவருக்கு தெரியவில்லை. இதையடுத்து வேல்முருகனை புகைப்படம் எடுத்து அந்த புகைப்படத்தையும், அவரது பெயர், ஊர் விவரத்தையும், தற்போது விழுப்புரத்தில் இருக்கும் இடம் குறித்தும் சமூகவலைதளங்களில் வீடியோவாக பதிவிட்டுள்ளனர். இதை பார்த்த வேல்முருகனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அடையாளம் கண்டு அவரது மகன் தாமசுக்கு தெரிவித்தனர்.

23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போன தனது தந்தை கிடைத்து விட்டதால் தாமஸ் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். தந்தையை பார்க்க தாமஸ், தனது சித்தப்பா செல்வராஜூடன் தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் வந்தடைந்தார். பின்னர் அங்குள்ள ஆசிரமம் சென்று தந்தை வேல்முருகனை பார்த்த மகிழ்ச்சியில் கண்ணீர் மல்க அவரை கட்டியணைத்தார். பின்னர் மாவட்ட கலெக்டர் மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஸ்ரீநாதா ஆகியோரின் முன்னிலையில் வேல்முருகனை அவரது குடும்பத்தினரிடம் ஆசிரம ஊழியர்கள் ஒப்படைத்தனர்.


காணாமல் போன தந்தையை 23 ஆண்டுக்கு பின் கண்டுபிடித்த மகன் - நெகிழ்ச்சி தருணம்

இதுகுறித்து தாமஸ் நெகிழ்ச்சியுடன் கூறுகையில், நான் 3-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது எனது தந்தை காணாமல் போய்விட்டார். அவரை இத்தனை ஆண்டுகாலம் பல இடங்களில் நாங்கள் தேடி வந்தோம், அவர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பதையும் அறிய முடியாமல் தவித்தோம். இருப்பினும் என்றைக்காவது ஒரு நாள் எனது தந்தை கிடைத்து விடுவார் என்ற நம்பிக்கையில் ஆண்டவனிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்தோம். இந்த சூழலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு எனது தந்தை கிடைத்திருப்பது எல்லையில்லா மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!
ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!
அமித் ஷாவுக்கு பரிசளிக்கப்பட்ட தங்க ஓடு: மாத்ரிமந்திர் ‘கோல்டன் டைல்’ ரகசியம் தெரியுமா?
அமித் ஷாவுக்கு பரிசளிக்கப்பட்ட தங்க ஓடு: மாத்ரிமந்திர் ‘கோல்டன் டைல்’ ரகசியம் தெரியுமா?
பானிப்பூரி விற்ற கை… இனி ஸ்டெதஸ்கோப் பிடிக்கும்! நீட் தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி!
பானிப்பூரி விற்ற கை… இனி ஸ்டெதஸ்கோப் பிடிக்கும்! நீட் தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
Embed widget