"அவர் அப்படி தான் பேசுவாரு... வேற என்ன பண்ணுவாரு ... விஜய்க்கு அமைச்சர் பொன்முடி பதிலடி
அவர் அப்படித்தான் பேசுவார்... மத்திய, மாநில அரசுகள் நாடகம் போடுவதாக விஜய் கூறியது பற்றி அமைச்சர் பொன்முடி பதிலடி

விழுப்புரம்: குடியிருப்பு பகுதிகளில் காட்டுபன்றிகள் வந்தால் கிலோ மீட்டர் கணக்கில் எடுத்துகொள்ளாமல் சுடுவதற்கு அனுமதி கொடுத்துள்ளதாகவும் விஜய் வாய்க்கு வந்ததை எதையாவது பேசிக்கொண்டிருப்பார் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட ஊராட்சி முகமை அலுவலகத்தில் வன அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் வனத்துறை அரசு தலைமை செயலாளர் செந்தில்குமார், முதன்மை வன அலுவலர் ஸ்ரீனிவாஸ் ராவ் ரெட்டி, முதன்மை தலைமை வனபாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரி பாதுகாவலர் ராகேஷ் குமார் டோக்ரா, முதன்மை தலைமை வன பாதுகாவலர் தெபாஷீஷ் ஜனா, உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, வனவிலங்குகளை பாதுகாப்பது, வனவிலங்குகளால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் நடவடிக்கை எடுப்பது, குறித்து ஆய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும், வனவிலங்கு பட்டியலில் உள்ள காட்டுப்பன்றிகளால் விவசாயிகளுக்கு பாதிப்பு உள்ளதால் 3 கிலோ மீட்டருக்கு அப்பால் காட்டுப்பன்றி வந்தால் சுடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும்
வனத்துறை இல்லாத பகுதிகளில் காட்டுப்பன்றி வந்தால் கிலோ மீட்டர் கணக்கில் எடுத்துகொள்ளாமல் சுடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
காட்டுப்பன்றிகளை சுடுவதற்கு மாநில அளவில் 28 ஆம் தேதி சுட தெரியாத வன அலுவலர்களுக்கு துப்பாக்கியால் சுடுவதற்கான பயிற்சி கோயம்புத்தூரில் அளிக்கபட உள்ளதாக கூறினார்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழக அரசும் மாநில அரசும் இணைக்கமாக செயல்படுவதாக நாடகம் போடுவதாக குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, “அவர் அப்படிதான் பேசுவார் வேற என்ன பண்ணுவாரு" என தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

