சி.வி.சண்முகம் கொலை முயற்சி வழக்கு: பாமகவினர் 15 பேர் விடுதலை! திண்டிவனம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பாமகவை சார்ந்த 15 பேர் விடுதலை.

விழுப்புரம்: அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பாமகவை சார்ந்த 15 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்து திண்டிவனம் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கடந்த 2006 ல் திண்டிவனத்தில் உள்ள தனது வீட்டில் அமர்ந்து கட்சியினருடன் பேசிக்கொண்டிருந்த போது அங்கு ஆயுதங்களுடன் வந்த கும்பல் அவரை தாக்கி கொல்ல முயற்சி செய்தது. காருக்கு அடியில் புகுந்து அவர் உயிர் தப்பினார். ஆனால் அவரது உறவினரும், அதிமுக தொண்டருமான முருகானந்தம் கொல்லப்பட்டார். இக்கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு தொடர்பாக பாமகவை சேர்ந்த
சீனுவாசன், கருணாநிதி, குமரவேல் பிரதீபன், ரகு, குமரன்,சிவா உள்ளிட்ட 20 பேர் மீது ரோஷணை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யபட்டது. பின்னர் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி 2011ல் இவ்வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து, 21.11.2014ல் திண்டிவனம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் பாமகவை சார்ந்த 20 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டதில் 5 பேர் இறந்து விட்டனர். மீதமுள்ள 15 பேர் மீது நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்ததில் 2025 ஏப்ரல் 28ம் தேதி வழக்கு விசாரணை நிறைவடைந்தது. ஜூன் 12ம் தேதி தீர்ப்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி முகம்மது பாரூக், தீர்ப்பு தேததிண6ம் தேதிக்கு ஒத்திவைத்த போது அன்றைய தினம் மீண்டும் ஜீன் 25 க்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார். இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்ற வழக்கின் தீர்ப்பிற்காக இன்று வழக்கு விசாரனைக்கு வந்தது. காலை வழக்கு விசாரனைக்கு வந்தபோது நண்பகல் 3 மணிக்கு தீர்ப்பளிப்பதாக நீதிபதி வழக்கினை ஒத்தி வைத்து தீர்ப்பு வழங்கினார்.
குற்றஞ்சாட்டப்பட்ட 15 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றும் சாட்சிகள் நிரூபிக்காதது மற்றும் சிபி ஐ தரப்பில் குற்றத்திற்கான உரிய ஆவணங்கள் தாக்கல் செய்தாதால் வழக்கிலிருந்து 15 பேரையும் குற்றவாளிகள் அல்ல என திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முகமது பாருக் உத்தரவிட்டார். இவ்வழக்கில் 50 பேரிடம் சாட்சி விசாரனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடதக்கது.





















