மேலும் அறிய
Advertisement
முன்னாள் அமைச்சர் பொன்முடி செம்மண் குவாரி வழக்கு; ஜெயக்குமார் மனு தள்ளுபடி
செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு.
விழுப்புரம்: திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் தன்னை அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு அனுமதிக்ககோரிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மனுவை தள்ளுபடி செய்து விழுப்புரம் நீதிமன்றம் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தின்போது விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகனும் எம்பியுமான பொன்.கவுதமசிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டதில் இதுவரை 11 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். 9 பேர், இவ்வழக்கு சம்பந்தமான கோப்புகளில் தங்களிடம் அப்போதிருந்த உயர் அதிகாரிகள் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாகவும், தங்களுக்கு இந்த முறைகேடு பற்றி எதுவும் தெரியாது என்றுகூறி அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.இந்நிலையில் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சார்பில் முன்னாள் அரசு தரப்பு வழக்கறிஞர் சீனிவாசன் சார்பில் செப்டம்பர் 9 மனுத்தாக்கல் செய்யததை ஏற்றுக்கொண்டிருந்த நிலையில்,
இவ்வழக்கில் ஆந்திராவில் நடைபெற்ற வழக்கினை மேற்கோள் காட்டி ஜெயக்குமாரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென முன்னாள் அமைச்சரின் வழக்கறிஞர் கார்த்திக் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவின் மீதான விசாரனை இன்று விசாரனைக்கு வந்த போது ஜெயக்குமார் விழுப்புரம் பகுதியை சார்ந்தவர் இல்லை என்பதாலும் அப்போதை கனிம வளத்துறை அமைச்சர் இல்லை என்பதாலும் இவ்வழக்கில் எந்த முகாந்திரமும் இன்றி ஜெயக்குமாரை சேர்க்க முடியாது என கூறி ஜெயக்குமாரின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
கிரிக்கெட்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion