வீடூர் அணையில் இருந்து 2022 -2023ம் ஆண்டு பாசனத்திற்கான நீர் நாளை திறப்பு
விழுப்புரம் : வீடூர் அணையில் இருந்து 2022 -2023 ஆம் ஆண்டு பாசனத்திற்கான நீர் நாளை திறப்பு.
வீடூர் அணை என்பது விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ளது. 89 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த அணை 1959 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் திரு காமராசர் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. அணையின் மொத்த நீளம் அகலம் முறையாக 15,800 அடி மற்றும் 37 அடி ஆகும். அணையின் மொத்தக் கொள்ளளவு 32 அடியாகும். 3200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெரும் வகையில் அமைந்துள்ள இந்த அணையின் பிரதான கால்வாய் 176 கி. மீ நீளம் கொண்டதாகும். இந்த அணை தமிழக அரசின் பொதுபணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், வீடூர் அணையிலிருந்து, திண்டிவனம் மற்றும் வானூர் வட்ட பகுதிகளுக்கு 2022 -2023 ஆம் ஆண்டு பாசனத்திற்கு 01.02.2023 முதல் 15.06.2023 வரை 135 நாட்களுக்கு மொத்தம் 328.56 மில்லியன்கன அடி தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன்மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 2200 ஏக்கர் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 1000 ஏக்கர்ஆக மொத்தம் 3200 ஏக்கர் நிலங்கள்பாசன வசதி பெறும் என நீர்வளத்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்