மேலும் அறிய
Advertisement
கடலூரில் பள்ளி மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - வீடியோ எடுத்து மிரட்டிய 3 மாணவர்கள் கைது..!
15 வயது பள்ளி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த பத்தாம் வகுப்பு மாணவர்கள்-போலீசார் விசாரணை.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவினங்குடியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் 15 வயது மாணவி கடந்த 22-5-22 அன்று அதே பள்ளியில், 12 ஆம் வகுப்பு முடித்த மாணவனின் பிறந்தநாளுக்கு சென்றுள்ளார். அப்போது பிறந்தநாள் நிகழ்ச்சியில் சில மாணவர்களும் கலந்து கொண்டனர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் அந்த மாணவனுடன் மாணவி புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பிறந்தநாள் கொண்டாடிய மாணவர் தன் சக நண்பர்களிடம் பகிர்ந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி பள்ளி மதிய உணவு இடைவெளியின் போது, அந்த மாணவியிடம் சக மாணவன் உன்னுடைய புகைப்படம் என்னிடம் உள்ளது. என்னுடன் வா என்று அவருடைய வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற மாணவி தன்னுடன் படிக்கும் மாணவர் இருவர் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். மூன்று பேரும் சேர்ந்து அந்த மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவை முன்னாள் மாணவர் ஒருவர் நண்பருக்கு அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் மாணவி பள்ளிக்கு செல்லவில்லை என்று தாயிடம் கூறியுள்ளார்.
அதற்கு அவருடைய தாய் காரணம் கேட்டதற்கு நடந்த சம்பவத்தை தாயிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து அவரது தாய் ஆவினங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் நேரில் சென்று மாணவியிடம் விசாரணை நடத்தி மூன்று பேரையும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பிரிவின் கீழ் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். புகைப்படத்தை அனுப்பிய முன்னாள் மாணவனையும் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion