Crime: 8 வயது மகளுடன் உடலில் தீ வைத்து தற்கொலை செய்த தாய்...போடி அருகே சோகம்..!
போடி அருகே மேல சொக்கநாதபுரம் கிராமத்தில் தனது எட்டு வயது மகளுடன் தாய் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஒன்றியத்திற்குட்பட்டது மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி. இங்கு தெற்கு ராஜ வீதியில் நல்லுசாமி என்பவர் வசித்து வருகிறார் திருமணம் ஆகி இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர் தனது தாய், தந்தை மற்றும் சகோதரருடன் ஒரே குடும்பத்தில் வசித்து வருகிறார். கூலி வேலை பார்த்து வரும் இவருக்கு முத்துலட்சுமி என்கிற (வயது 26) மனைவியும் ஹேமா ஸ்ரீ என்ற 8 வயது பெண் குழந்தையும் உள்ளது.
மேலும் படிக்க: Boris Johnson Rishi sunak: பதவி விலகிய போரிஸ் ஜான்சன்.. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர்தான் அடுத்த பிரதமரா?
நேற்று காலை சுமார் 9 மணியளவில் நல்லுச்சாமி உடைய மனைவி தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டு அருகில் இருந்த தனது எட்டு வயது பெண் குழந்தையையும் கட்டிப்பிடித்துக் கொண்டார்.
இதனால் இருவரும் தீப்பற்றி எரிந்த நிலையில் இவர்கள் இருவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உள்ளே சென்று பார்த்த பொழுது இருவரும் முற்றிலும் எரிந்து உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இருவரும் போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தீக்காயம் அதிகமாக இருந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து இருவரும் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போடி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் குமார் தலைமையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தற்கொலை சம்பவத்தில் மர்மம் உள்ளதால் காவல்துறையினர் பல்வேறு கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028.தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்