MP Ravikumar: போலியான ஆடியோ, வீடியோ வெளியிடுவதில் பாஜகவினர் கைதேர்ந்தவர்கள் - எம்பி ரவிக்குமார்
போலியான ஆடியோ, வீடியோ வெளியிடுவதில் பாஜகவினர் கைதேந்தவர்கள் - எம்பி ரவிக்குமார்
![MP Ravikumar: போலியான ஆடியோ, வீடியோ வெளியிடுவதில் பாஜகவினர் கைதேர்ந்தவர்கள் - எம்பி ரவிக்குமார் BJP involved in publishing fake audio video VCK MP Ravikumar TNN MP Ravikumar: போலியான ஆடியோ, வீடியோ வெளியிடுவதில் பாஜகவினர் கைதேர்ந்தவர்கள் - எம்பி ரவிக்குமார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/11/6ec83bb391efd92b8c802f2505cb9ac41683808972529194_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம் : போலியான ஆடியோ, வீடியோ வெளியிடுவதில் பாஜகவினர் கைதேந்தவர்கள் என்றும் ராஜஸ்தானை போல தமிழக அரசும் சுகாதார துறையை மேம்படுத்த தனி சட்டம் இயற்ற வேண்டுமெனவும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
விழுப்புரம் மகாராஜபுரத்தில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எம் பி ரவிக்குமார், ஜிப்மர் நிர்வாகம் நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பினை கிடப்பில் போடுவதாக அறிவித்துள்ளதற்கு நன்றியை தெரிவிப்பதாகவும் கட்டணம் வசூலிக்கும் அறிவிப்பினை கிடப்பில் போடுவதற்கு பதிலாக ரத்து செய்யப்படும் என ஜிப்மர் நிர்வாகம் அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தினார். தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது மகிழ்சியளிப்பதாகவும் புதியதாக பொறுப்பேற்ற டி.ஆர்.பி ராஜாவுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் சிறப்பாக பணியாற்றி முதல்வரின் நன்மதிப்பினை பெறவேண்டும் என கூறினார்.
பி.டி.ஆர் ஆடியோ விவகாரத்தால் தான் அமைச்சரவை மாற்றம் நடைபெற்றதா என செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த எம்பி ரவிக்குமார், போலியான ஆடியோ, வீடியோ வெளியிடுவதில் பாஜகவினர் கைதேர்ந்தவர்கள் அந்த ஆடியோ போலியானது என பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்த நிலையில், ஆடியோ விவகாரத்தினால் தான் அமைச்சரவை மாற்றம் நடைபெறவில்லை என கூறினார். மேலும் வடமாநிலத்தவர்கள் தாக்கபடுவதாக வெளியிடப்பட்ட வீடியோ விவகாரத்தில் பாஜகவினர் போலியான வீடியோ வெளியிட்டது அம்பலமானது தெரியவந்தது என்றும் ராஜஸ்தானை போல தமிழக அரசும் சுகாதார துறையை மேம்படுத்த தனி சட்டம் இயற்ற வேண்டுமென வலியுறுத்தினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)