மேலும் அறிய

Ayudha Pooja 2024: ஆயுதபூஜையையொட்டி பூக்களின் விலை இரு மடங்காக உயர்வு

Ayudha Pooja 2024: ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு விழுப்புரத்தில் இரு மடங்காக உயர்ந்த பூக்களின் விலை.

ஆயுத பூஜையும் விஜய தசமியும் ( Ayudha Pooja 2024 Tamil Nadu ) 

கல்விக்கு அதிபதியாக இருப்பவர் சரஸ்வதி என்று நம்பப்படுகிறது. விஜய தசமி நாளில் சரஸ்வதியை வழிபட்டு முதன்முதலில் படிப்பை தொடங்கும் ‘வித்யாரம்பம்’ நிகழ்வுகள் நடைபெறும். முந்தைய நாள் ஆயுத பூஜை. ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற சொல்லாடல் இருக்கிறது இல்லையா. ஆம், தொன்மையான விசயங்களில் ஒன்று தொழில் செய்வதற்கு, உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக இருக்கும் ஆயுதங்களை பூஜித்து வழிபடுவது. இது பழங்காலத்தில் இருந்தே வழக்கமாக உள்ளது.  இந்தியா முழுவதும் நவராத்திரியின் ஒன்பது நாட்களில், துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்கள் வழிபடுவதைச் முதன்மைப்படுத்துகிறது. தசரா அன்று ராவணனை ராமர் வென்றதைக் கொண்டாடுவதன் மூலம் முடிவடைகிறது. மறுபுறம், துர்கா தேவி அரக்கன் மகிஷாசுரனை வென்றதை, துர்கா பூஜையாக  கொண்டாடப்படுகிறது. துர்கா தேவியின் முதல் அவதாரமான ஷைல்புத்ரியை வழிபடுவதன் மூலம், நவராத்திரி தொடங்குகிறது, அதே சமயம் துர்கா மற்றும் மகிஷாசுரனுக்கு இடையே போர் தொடங்கிய நாளான, மகாளயபட்சம் அன்று துர்கா பூஜை தொடங்குகிறது.

தசரா அன்று ராவணன் உருவ பொம்மைகளை எரிப்பதன் மூலம் நவராத்திரி கொண்டாட்டம் முடிவடையும். துர்கா பூஜை சிந்தூர் விளையாட்டுடன் முடிவடைகிறது. அங்கு திருமணமான பெண்கள் சிலைகளை மூழ்கடிப்பதற்கு முன்பு, ஒருவருக்கொருவர் சிந்தூர் என்று சொல்லப்படும், குங்குமத்தைக் கொண்டு விளையாடுகிறார்கள். நவராத்திரி கொண்டாட்டத்தின் போது, ​​துர்கா தேவியின் பக்தர்கள் ஒன்பது நாட்களுக்கு இறைச்சி, முட்டை, வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற உணவுகளை சாப்பிடாமல் பக்தியுடன் விரதம் இருக்கிறார்கள்

 இரு மடங்காக  உயர்ந்த பூக்களின் விலை

இந்துக்கள் கொண்டாடும் முக்கிய விழாக்களில் ஒன்றான ஆயுத பூஜை Ayudha Pooja நாளை திங்கட்கிழமை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆயுத பூஜை கொண்டாட தேவையான பூஜை பொருட்களை வாங்க கடை வீதிகள், மார்க்கெட் வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதேபோல் பூக்களை வாங்குவதற்கும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. சாதாரணமாக பண்டிகை காலங்களில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து காணப்படும். அதேபோல் ஆயுத பூஜைக்கு இன்று ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில் விழுப்புரம் பூமார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு இருந்த விலையை விட ஒவ்வொரு பூக்களின் விலையும் இருமடங்காக உயர்ந்து காணப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியில் உள்ள மலர் சந்தையில்  வியாபரிகள், திண்டிவனம், பாண்டிச்சேரி, சென்னை போன்ற பல பகுதியிலிருந்து பூக்களை கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.

விலைப்பட்டியல் என்ன ?

விழுப்புரம் மலர் சந்தையில் கடந்த வாரம்  600க்கு விற்கப்பட்ட குண்டு மல்லிகைப்பூ கிலோ 1000 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்கப்பட்ட அரளிப்பூ கிலோ 650 ரூபாய்க்கும்,  700 ரூபாய்க்கு விற்கப்பட்ட  ஜாதிமல்லி கிலோ 900 க்கும், 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட கேந்தி பூக்கள் கிலோ 90,100 ரூபாய்க்கும், 240 ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பங்கி பூ கிலோ 280 ரூபாய்க்கும் , 400 விற்கப்பட்ட முல்லை கிலோ 800 ரூபாய்க்கும், 150 ரூபாய்க்கு விற்கப்பட்ட மூக்குத்தி ரோஸ் கிலோ 500 ரூபாய்க்கும், 600 ரூபாய்க்கு விற்கப்பட்ட கனகாம்பரம் கிலோ 1200 ரூபாய்க்கும், பன்னீர் ரோஜா கிலோ 350 ரூபாய்க்கும், கல் ரோஜா கிலோ 340க்கும், காக்கட்டான் பூ கிலோ 450 ரூபாய்க்கும், 90 ரூபாய்க்கு கோழிக்கொண்டை பூவும் விற்பனையாகிறது.

பொதுமக்கள் ஆர்வம்

பல்வேறு ஊர்களில் இருந்து பலரகப்பட்ட பூக்கள் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் பின்புறத்தில் அமைந்துள்ள பூந்தோட்டம் பகுதியில் உள்ள மலர் சந்தையில் விற்கப்படுவதால், பொதுமக்கள் அதிக அளவில் பூக்களை வாங்கி செல்கின்றனர். பூக்கள் விற்பனை குறித்து வியாபாரிகள் கூறுகையில்.... ஆயுத பூஜை, நவராத்திரி விழா, விஜயதசமி பண்டிகையில் பூக்களின் தேவை இருப்பதால் விலை அதிகரித்து இருந்தாலும் பூக்களை பொதுமக்கள் வாங்கி செல்கிறார்கள் என தெரிவித்த வியாபரிகள் விற்பனையும் இந்தாண்டு  சிறப்பாக இருப்பது மட்டுமல்லாமல் ஆயுதபூஜை மற்றும் விஜய தசமி வருவதால் பூக்களின் விலை சற்று உயர்ந்து தான் இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lebanon: லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழி தாக்குதல் - 22 பேர் பலி, 117 பேர் காயம்
Lebanon: லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழி தாக்குதல் - 22 பேர் பலி, 117 பேர் காயம்
TVK Vijay:
TVK Vijay: "முயற்சி வெற்றி பெறட்டும்" தமிழக மக்களுக்கு ஆயுத பூஜை வாழ்த்து கூறிய நடிகர் விஜய்!
Vettaiyan Collection Day 1: வேட்டையன் முதல் நாள் வசூல் வேட்டை - விஜயின் தி கோட்டை மிஞ்சினாரா சூப்பர் ஸ்டார் ரஜினி?
Vettaiyan Collection Day 1: வேட்டையன் முதல் நாள் வசூல் வேட்டை - விஜயின் தி கோட்டை மிஞ்சினாரா சூப்பர் ஸ்டார் ரஜினி?
Breaking News LIVE 11 OCT 2024: மிக கனமழை எச்சரிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்
Breaking News LIVE 11 OCT 2024: மிக கனமழை எச்சரிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay vs BJP | பாஜகவிடம் பணிந்த விஜய்? ஆயுத பூஜைக்கு வாழ்த்து! காரசார விவாதம்Noel Tata : TATA-ன் கிரீடம் யாருக்கு? ரத்தன் டாடாவின் மனசாட்சி! யார் இந்த நோயல் டாடா?Ratan Tata Untold love story  | ரத்தன் டாட்டா BREAK UP 💔 கடைசி வரை BACHELOR!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lebanon: லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழி தாக்குதல் - 22 பேர் பலி, 117 பேர் காயம்
Lebanon: லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழி தாக்குதல் - 22 பேர் பலி, 117 பேர் காயம்
TVK Vijay:
TVK Vijay: "முயற்சி வெற்றி பெறட்டும்" தமிழக மக்களுக்கு ஆயுத பூஜை வாழ்த்து கூறிய நடிகர் விஜய்!
Vettaiyan Collection Day 1: வேட்டையன் முதல் நாள் வசூல் வேட்டை - விஜயின் தி கோட்டை மிஞ்சினாரா சூப்பர் ஸ்டார் ரஜினி?
Vettaiyan Collection Day 1: வேட்டையன் முதல் நாள் வசூல் வேட்டை - விஜயின் தி கோட்டை மிஞ்சினாரா சூப்பர் ஸ்டார் ரஜினி?
Breaking News LIVE 11 OCT 2024: மிக கனமழை எச்சரிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்
Breaking News LIVE 11 OCT 2024: மிக கனமழை எச்சரிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்
Ayutha Pooja 2024: தமிழ்நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை கோலாகல கொண்டாட்டம்! பூக்கள், பழங்கள் விற்பனை படுஜோர்!
Ayutha Pooja 2024: தமிழ்நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை கோலாகல கொண்டாட்டம்! பூக்கள், பழங்கள் விற்பனை படுஜோர்!
Aadhar Money Withdrawal: டெபிட்/கிரெடிட் கார்ட் வேண்டாம், ஆதார் போதும் -  பணம் எடுப்பது எப்படி? வரம்பு என்ன?
Aadhar Money Withdrawal: டெபிட்/கிரெடிட் கார்ட் வேண்டாம், ஆதார் போதும் - பணம் எடுப்பது எப்படி? வரம்பு என்ன?
Pigeons Robbery: அடுத்தடுத்து 50 வீடுகளில் கொள்ளை, சிக்கிய கொள்ளையன், புறா மூலம் ரூ.30 லட்சம் திருடியது எப்படி?
Pigeons Robbery: அடுத்தடுத்து 50 வீடுகளில் கொள்ளை, சிக்கிய கொள்ளையன், புறா மூலம் ரூ.30 லட்சம் திருடியது எப்படி?
ஜாதகத்தில் குரு உச்சம் வேண்டுமா? அப்போ இந்த குரு ஸ்தலத்துக்கு போங்க!
ஜாதகத்தில் குரு உச்சம் வேண்டுமா? அப்போ இந்த குரு ஸ்தலத்துக்கு போங்க!
Embed widget