மேலும் அறிய
Advertisement
Rasipalan December 14: சிம்மத்திற்கு ஆசை நிறைவேறும்; கன்னிக்கு வெற்றிதான்- உங்க ராசி பலன்?
Rasi Palan Today, December 14: இன்று கார்த்திகை மாதம் 29ஆம் நாளில், எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் குறித்து விரிவாக காணலாம்.
இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today December 14, 2024:
அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....
மேஷ ராசி
பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். நிதானமான செயல்பாடுகள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். புனித தலம் சென்று வருவதற்கான சூழல் ஏற்படும். வழக்கு சார்ந்த அலைச்சல் ஏற்படும். எதிர்பாராத பணவரவுகள் கிடைக்கும். வீடு, மனை விற்பனையில் லாபம் கிடைக்கும். சாதுரியமான பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். சிக்கல் மறையும் நாள்.
ரிஷப ராசி
வாழ்க்கை துணைவருடன் சிறு சிறு கருத்து மோதல்கள் ஏற்பட்டு நீங்கும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். நண்பர்களிடத்தில் பேசும்போது கவனம் வேண்டும். குணநலன்களில் மாற்றங்கள் உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகமும் ஆதரவும் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் உருவாகும். பக்தி மேம்படும் நாள்.
மிதுன ராசி
பழைய நினைவுகளால் மகிழ்ச்சியான சூழ்நிலை அமையும். கௌரவ பதவிகள் மூலம் செல்வாக்குகள் மேம்படும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். பெற்றோர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பயணம் தொடர்பான பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். நீண்டநாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் ஏற்படும். வியாபாரம் தொடர்பான முதலீடுகள் மேம்படும். எதிர்ப்பு விலகும் நாள்.
கடக ராசி
வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நண்பர்களிடம் எதிர்பார்த்த சில காரியங்களில் மாற்றம் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஆலோசனை பெற்று செயல்படவும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
சிம்ம ராசி
வெளியூர் பயணத்தில் லாபகரமான சூழல் உண்டாகும். உலகியல் நடவடிக்கைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும். உயர் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துச் செல்லவும். விருப்பம் நிறைவேறும் நாள்.
கன்னி ராசி
எதிர்காலம் தொடர்பான முயற்சிகளில் பொறுமை வேண்டும். விவசாயம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். வியாபாரப் பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். திறமைக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். ஜெயம் நிறைந்த நாள்.
துலாம் ராசி
மற்றவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவதில் விவேகம் வேண்டும். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். உணர்ச்சி வேகம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். உயர் அதிகாரிகளுடன் அளவுடன் இருப்பது நல்லது. செயல்களின் தன்மை அறிந்து செயல்படவும். வழக்கு சார்ந்த விஷயங்களில் அலைச்சல் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.
விருச்சிக ராசி
பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். உத்தியோகப் பணிகளில் உயர்வான சூழல்கள் ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அனுபவம் அதிகரிக்கும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் சாதகமாகும். தெளிவு பிறக்கும் நாள்.
தனுசு ராசி
உறவினர்கள் வருகையில் மகிழ்ச்சி உண்டாகும். அனுபவ ரீதியாக பணி சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். கடன் சார்ந்து சில தெளிவுகள் உண்டாகும். தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். தனவரவில் இருந்து வந்த ஏற்ற, இறக்கங்கள் குறையும். நீண்ட கால முதலீடுகள் குறித்த எண்ணம் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
மகர ராசி
முயற்சிக்கு உண்டான பாராட்டுக்கள் கிடைக்கும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் புதிய சிந்தனைகள் உருவாகும். நண்பர்களிடம் இருந்துவந்த வேறுபாடுகள் விலகும். விவேகமான செயல்பாடுகள் உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்வீர்கள். நாவல் பற்றிய ஆர்வம் அதிகரிக்கும். தாமதம் மறையும் நாள்.
கும்ப ராசி
பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் படிப்படியாக குறையும். சமூகப் பணி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான தெளிவுகள் ஏற்படும். கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் மேம்படும். உத்தியோக பணிகளில் அதிகாரங்கள் மேம்படும். சுகம் நிறைந்த நாள்.
மீன ராசி
வியாபார பணிகளில் நிதானம் வேண்டும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் மதிப்புகள் மேம்படும். புத்திரர்கள் வகையில் ஆதாயம் உண்டாகும். தடைப்பட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. வரவு நிறைந்த நாள்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
ஆன்மிகம்
திருவண்ணாமலை
வேலைவாய்ப்பு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion