வழக்கறிஞர் ஜெய்கணேஷ் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரண்
சென்னை, துரைப்பாக்கத்தில் வழக்கறிஞரை 3 நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை துரைப்பாக்கம் வழக்கறிஞர் ஜெய்கணேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சென்னையில் அமைந்துள்ளது துரைப்பாக்கதில் நேற்று காலை இந்த பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வழக்கறிஞர் ஜெய்கணேஷ் என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். ஜெய்கணேஷ் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக ஆஜராகி வந்தார். நேற்று காலை நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற வழக்கறிஞரை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சென்னை துரைப்பாக்கம் வழக்கறிஞர் ஜெய்கணேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ஸ்ரீதர்(26), முருகன்(23), பிரவீன்(27) ஆகியோர் விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ஆனால் வழக்கறிஞர்கள் யாரும் அவருக்காக ஆஜராக கூடாது என்று சக வழக்கறிஞர்கள் பிரச்சனையில் ஈடுபட்டதால் மனு தாக்கல் வாபஸ் பெறப்பட்டது. அந்த மூன்று பேரும் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட உள்ளனர். தற்போது நீதிமன்றத்தில் இருந்து வெளியில் வரும் போது அவர்கள் மீது தாக்கல் நடத்த வழக்கறிஞர் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.. இதனால் நீதிமன்றத்தில் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளனர்.