மேலும் அறிய
Advertisement
ஆந்திர எல்லையை தாண்டி கொட்டும் பாலாற்று வெள்ளம் - துள்ளிகுதிக்கும் மீன்களை அள்ளிச்செல்லும் மக்கள்
திம்மாம்பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது
தமிழகம் மட்டும் இன்றி தமிழகத்தை ஒட்டிய அண்டை மாநில ஆந்திராவிலும் கனமழை பெய்து வருகிறது. கர்நாடக மற்றும் ஆந்திராவை நீர்பிடிப்பு பகுதியாக கொண்ட பாலாற்றில் தற்போது சுமார் 1000 கனஅடிக்கு மேல் வெள்ளம் வந்துகொண்டுள்ளது. தமிழகத்தில் ஆந்திர எல்லையான புல்லூர் பகுதியில் பாலாறு அடி எடுத்து வைக்கிறது. பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் இறங்க பொது மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆனால் புல்லூர் பகுதியில் வரும் வெள்ள நீரில் அதிக அளவு மீன்கள் வருவதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் எச்சரிக்கையையும் மீறி ஆர்வமிகுதியின் காரணமாக மக்கள் ஆற்றில் இறங்கி மீன் பிடிக்க தொடங்கியுள்ளனர். சிலர் மீன்பிடி வலையை பயன்படுத்தியும், சிலர் தூண்டில், லுங்கி போன்றவற்றை பயன்படுத்தியும் ஆற்றில் வரும் மீன்களை பிடித்து எடுத்து செல்கின்றனர். ஆற்றில் அடித்து வரும் மீன்கள் சுமார் 1 கிலோ வரை உள்ளதால் மக்கள் இன்னும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் தாங்கள் பிடிக்கும் மீன்களுடன் செல்பி போட்டோ எடுத்து மகிழ்ந்து அதை சமுக வலை தளங்களிலும் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து தமிழக ஆந்திரா எல்லைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஆந்திரா மாநில பகுதியில் இருக்கக்கூடிய 22 தடுப்பணைகள் முழுவதுமாக நிரம்பி தற்பொழுது தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியில் ஆந்திர அரசு கட்டியுள்ள கடைசி அணையான புல்லூர் தடுப்பணை நிரம்பி அதனுடைய உபரி நீரானது 1000 கனஅடி வீதம் தமிழகத்திற்கு வந்து கொண்டுள்ளது.
இதன் காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ள நீரானது திம்மாம்பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 285 ஏரிகள் மற்றும் 269 குளம், குட்டைகள் உள்ளது. இதில் 24 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளது. 45 ஏரிகள் 75% தண்ணீர் நிரம்பி வருகிறது. மேலும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 49 ஏரிகள் உள்ளது. இதில் 18 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதில் 4 ஏரிகளில் 75% நீர் நிரம்பி உள்ளது மீதமுள்ள 27 ஏரிகளில் நீர் வரத்து தற்போது வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழக ஆந்திரா எல்லை பகுதியில் உள்ள நீர்பிடிப்பு பகுதியில் தொடர் கன மழை காரணமாக தமிழக எல்லை பகுதியான வாணியம்பாடி அடுத்த புல்லூர் தடுப்பணையை தாண்டி பாலாற்றுக்கு தற்போது 1000 கன அடி வீதம் நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் பாலாறு கரையோரம் உள்ள பொது மக்கள் ஆறு, ஏரி போன்ற நீர் நிலைகளில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என வெள்ள அபாய எச்சரிக்கை திருப்பத்தூர் மாவட்ட சார்பில் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர் மழை காரணமாக வாணியம்பாடியில் உள்ள தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் வெளியேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
க்ரைம்
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion