விதவிதமான கட்டிங்...சலூன்காரர்களுக்கு எச்சரிக்கை...கடுப்பான மக்கள்..!
வித்தியாசமான முறையில் சிகை அலங்காரத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு வந்தால் சிகை அலங்காரம் சீராக செய்யத சலூன் கடை காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வேலூர் ஆட்சிய எச்சரிக்கை
தற்போது கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் பலர் வித்தியாசமனா முறையில் ஸ்பைக் கட், அண்டர் கட் , டிஸ்கோகட், பாப் கட்டிங், மஸ்ரூம் கட்டிங், லேயர் கட்டிங் என மாணவர்கள் ஒழிங்கினம் அற்ற முறையில் சிகை அலங்காரம் செய்து பள்ளிகளுக்கு வருகின்றனர். இப்படிப்பட்ட சிகை அலங்காரங்களால் மாணவர்களின் நல்லொழுக்கம் கெடுவதாக பள்ளிக்கல்வித்துறை கூறி இருந்தது. இந்த மாதிரியான சிகை அலங்காரங்களுடன் வேலூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கு தலை முடியை சீராக வெட்டாத சலூன் கடை காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்து இருந்தார். ஆட்சியரின் இந்த அறிவிப்பு மக்களிடையே கடும் விமர்சனத்தை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து கண்ணியம்பாடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒரு அரசு பள்ளியின் முன்பு இருந்த கடையில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களான பான்பராக், குட்கா போன்றவை இருப்பதை கண்டுபிடித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் கூறியிருப்பதாவது:-
பள்ளிக்கு வரும் மாணவர்கள் ஒழுக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சீருடை மற்றும் சிகை அலங்காரத்தில் மாணவர்கள் ஒரே மாதிரியாக வரவேண்டும். அதற்காக சலூன் கடைகாரர்கள் மற்றும் தையல்காரர்களை அழைத்து அறிவுறுத்தியுள்ளோம். மாணவர்கள் கட்டாயம் இதனை கடைபிடிக்க வேண்டும். மாணவர்களுக்கு தலை முடியை சீராக வெட்டாத சலூன் கடை காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், கடைகளுக்கு சீல் வைக்கப்படும். ஏற்கனவே வேறு விதமாக முடிவெட்டிக் கொண்டவர்களுக்கு இலவசமாக முடியை திருத்தி வெட்டவேண்டும். அரசு வழங்கும் சீருடைகளை மாற்றி முழங்கால் தெரியும் வரை தைத்துக் கொடுக்கும் டைலர் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கத்தினர் புகார் மனு;
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், வேலூரில் பள்ளி மாணவர்களுக்கு சீராக முடி வெட்டாத சலூன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் இதனால் வேலூர் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள் அதிர்ச்சிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி உள்ளனர். இந்த தொழிலை அரசின் அனைத்து விதி முறைகளையும் பின்பற்றி முறையாக செய்து வருகிறோம். சலூன் கடைக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கும் கட்டாயத்தின் அடிப்படையிலும் நாங்கள் வேலை செய்து வருகிறோம். ஆகவே மாவட்ட ஆட்சியர் தாங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பை மறுபரிசீலனை செய்து முடிதிருத்தும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
பத்திரிகையாளர்களிடம் பேசிய சிகை அலங்காரம் செய்யும் ஊழியர்கள்;
எங்களிடத்தில் சிகை அலங்காரம் செய்வதற்காக பெற்றோர்களுடன் வரும் மாணவர்களில் சிலர் ஒழுங்கான முறையில் சிகை அலங்காரம் செய்ய மறுக்கின்றனர். பெற்றோரை பேச்சை கேட்காமல், நாங்கள் கூறுவது எப்படி கேட்பார்கள். சில நாட்களுக்கு முன்னர் புல்லிங்கோ ஸ்டைலில் சிகை அலங்காரம் செய்த மாணவனை அவர்களுடைய பெற்றோர் கண்டித்தனர். அதற்கு அந்த மாணவன் ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். பின்னர் நாங்கள் இதைப்பற்றிய கூறி ஏதாவது செய்து கொண்டால் நாங்கள் என்ன செய்வது என்று தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்