மேலும் அறிய

TN Rains: திருவண்ணாமலை மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய மழை - மழை நிலவரம் இதோ

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளபடி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று அதிகாலை முதலே இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான ஆரணி, செய்யார், பேருந்து நிலையம், வந்தவாசி, செங்கம், கலசபாக்கம், கண்ணமங்கலம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (20.06.2023) ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


TN Rains: திருவண்ணாமலை மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய மழை  - மழை நிலவரம் இதோ

 

சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

மழையின் காரணமாக திருவண்ணாமலை நகரின் சாலைகளிலும் தாழ்வான பகுதிகளான அவலூர் பேட்டை சாலை, தண்டராம்பட்டு சாலை, திண்டிவனம் சாலை, கண்ணமங்கலம் பகுதியில், தாமரை குளம் கரையோர குடியிருப்புகள் உள்ளிட்ட திருவண்ணாமலை நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மழை பெய்யும் என ஓரிரு நாட்களுக்கு முன்னரே சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், முன்னேற்பாடுகள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டமும் நடைபெற்று இருந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகள் என குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் எந்தவிதமான முன்னேற்பாடுகளையும் செய்யாததால், அப்பகுதியில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

 


TN Rains: திருவண்ணாமலை மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய மழை  - மழை நிலவரம் இதோ

காலை முதலே பெய்து வரும் மழையின் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்களும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழை அதிக அளவாக தண்டராம்பட்டு 47.60 மில்லிமீட்டரும், ஆரணியில் 47.20 மில்லிமீட்டரும், 88.20 மி.மீ, வெம்பாக்கம் 40.00 மில்லிமீட்டரும், வந்தவாசி 38.00 மில்லிமீட்டரும், சேத்துப்பட்டு 29.60 மில்லிமீட்டரும், ஜமுனாமரத்தூர் 24.00 மில்லிமீட்டரும், கீழ்பெண்ணாத்தூர் 23.20, மில்லிமீட்டரும், போளூர் 20.80 மில்லிமீட்டரும், திருவண்ணாமலை 12.20 மில்லிமீட்டரும், செங்கம் 1.80 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களிலும் மழைநீர் புகுந்துள்ளது.

உங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Breaking News LIVE 29th SEP 2024:  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறை ஒதுக்கீடு
Breaking News LIVE 29th SEP 2024: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறை ஒதுக்கீடு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Breaking News LIVE 29th SEP 2024:  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறை ஒதுக்கீடு
Breaking News LIVE 29th SEP 2024: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறை ஒதுக்கீடு
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின் VS உதயநிதி! இளைஞரணிச் செயலாளர் முதல் துணை முதல்வர் வரை - ஓர் அலசல்
மு.க.ஸ்டாலின் VS உதயநிதி! இளைஞரணிச் செயலாளர் முதல் துணை முதல்வர் வரை - ஓர் அலசல்
Lubber Pandu: ப்ளாக்பஸ்டர் ஹிட் லப்பர் பந்து! தினேஷின் கெத்து கேரக்டரில் நடிக்க வேண்டியது இவரா?
Lubber Pandu: ப்ளாக்பஸ்டர் ஹிட் லப்பர் பந்து! தினேஷின் கெத்து கேரக்டரில் நடிக்க வேண்டியது இவரா?
Embed widget