மேலும் அறிய
Advertisement
வீட்டுக்கு லேட்டா வந்ததால் நூதன தண்டனை கொடுத்த தந்தை... ஆள விடுங்கடா சாமி பையன் எடுத்த முடிவு
“நான் பிள்ளையை நல்ல குணத்துடன் வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி செய்தேன். ஆனால் இவன் தவறாக நினைத்து கொண்டான்”
திருப்பத்தூர்: தந்தை திட்டி 3 கிலோ மீட்டர் ஓட சொன்னதால் மாணவன் மாயமானதை தொடர்ந்து, நகர போலீசார் தீவிரமாக தேடி பூங்காவில் மறைந்து இருந்த மாணவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரம், வடக்கு முத்தப்பர் தெரு பகுதியை சேர்ந்த குமார் என்பவரின் மகன் அபினேஷ் (14) என்ற மாணவன் குனிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு மாலை நேரத்தில் பள்ளியை விட்டு மாணவன் தாமதமாக வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவரது தந்தை குமார் மாணவனை கடுமையாக திட்டி அடித்து காலையில் எழுந்து மைதானத்தில் 3 கிலோமீட்டர் ஓட வேண்டும் என்று நூதன முறையில் தண்டனை அளித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த மாணவன் காலை நேரத்தில் வீட்டில் இருந்து யாருக்கும் சொல்லாமல் வெளியே புறப்பட்டு சென்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடி கிடைக்காததால் திருப்பத்தூர் நகர போலீசார் தீவிரமாக தேடியதில் நகராட்சிக்கு உட்பட்ட அரசு பூங்காவில் மறைந்து இருந்த மாணவனை அழைத்து சென்று அவருக்கு உணவு வாங்கி கொடுத்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அவரது பெற்றோரிடம் கேட்டபோது, “நான் பிள்ளையை நல்ல குணத்துடன் வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி செய்தேன். ஆனால் இவன் தவறாக நினைத்து கொண்டான்” என்று கூறினார்.
இனிமேல் மாணவனை மனம் உடையும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என்று அவரது தந்தையை எச்சரித்து போலீசார். அனுப்பினர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion