மேலும் அறிய
Advertisement
குப்பை கிடங்கில் தீ வைத்த மர்ம நபர்; புகைமண்டலமாக காட்சியளித்த திருப்பத்தூர்
கட்டுக்கடங்காத தீயின் காரணமாக புகைமண்டலமாக மாறிய நகர்! வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி!
திருப்பத்தூரில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் தீ வைத்த மர்ம நபரால் அப்பகுதி புகைமண்டலமாக காட்சியளித்தது. வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள 36 வார்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை கிருஷ்ணகிரி மெயின் ரோடு ப.வு.ச.நகர் பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கொட்டப்படுகின்றன.
இந்த குப்பையில் செம்பு, இரும்பு, பிளாஸ்டிக் பொருட்களை எடுப்பதற்காக சமூக விரோதிகள் தீ வைத்து விடுகின்றனர்.
இந்த நிலையில் அதே போல் மர்ம நபர் குப்பை கிடங்கிற்கு இன்று தீ வைத்து சென்றுள்ளனர். இதனால், தீ மளமளவென குப்பை முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பெயரில் திருப்பத்தூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடனடியாக தீயை அணைக்க முற்பட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக தீயை அணைக்க முற்பட்டதால் தண்ணீர் காலியாக, அதன் பின்னர் திருப்பத்தூர் நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தண்ணீர் வரவழைக்கப்பட்டு தீயை அணைத்தனர்.
அதற்குள் கிருஷ்ணகிரி மெயின்ரோடு முழுவதும் புகை மண்டலமாக மாறி வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். கண் எரிச்சலில் எதிரில் வரும் வாகனம் தெரியாமல் அவதி அடைந்தனர்.
மேலும் அக்கம்பாக்கத்தில் சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகினர். எனவே இதுபோல் குப்பை கிடங்கில் தீ வைக்கும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion