மேலும் அறிய
Advertisement
ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் தீ விபத்து; எரிந்து கருகிய 5000 கோழிகள்
இன்று காலை கோழிப்பண்ணையில் திடீரென மின்கசிவின் காரணமாக திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் மின்கசிவின் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 5000 கோழிகள் தீயில் எரிந்து கருசி நாசமானது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் பகுதியை சேர்ந்தவர் பெரிய தம்பி. இவருடைய மகன் துரை முருகன், இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் கோழிப்பண்ணை வைத்து 10 ஆயிரம் கோழிகளை வளர்த்து வரும் நிலையில், இன்று காலை கோழிப்பண்ணையில் திடீரென மின்கசிவின் காரணமாக திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த திடீர் தீவிபத்தில் கோழிப்பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த சுமார் 5000 கோழிகள் தீயில் எரிந்து கருகி நாசமாகின.
பின்னர் இதுகுறித்து தகவலிறந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் தீயணைப்புதுறையினர் நீண்ட நேரப்போராடத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து உமராபாத் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
மேலும் கோழிப்பண்ணையில் மின்கசிவினால் ஏற்பட்ட தீவிபத்தில் 5000 கோழிகள் தீயில் எரிந்து கருகிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion